• முகப்பு
  • district
  • செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி திருவண்ணாமலை நகராட்சி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளதையொட்டி இன்று (15.07.2022) திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட ஒட்டு வில்லைகளை பேருந்துகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாமல்லபுரத்தில் பூஞ்சேரி கிராமத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 28.07.2022 முதல் 10.08.2022 வரை நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்ப்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்போட்டிக்கான தொடக்க விழா மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 28.07.2022 அன்று நடைபெற உள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலைமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு ஆய்வு கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் ஒருங்கிணைந்து, மாவட்டங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, இச்செஸ் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டுமென அறிவுறுத்தினார். அதன்படி இன்று (15.07.2022) திருவண்ணாமலை நகராட்சி சார்பில், திருவண்ணாமலை நகராட்சி மத்திய பேருந்து நிலையத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ். இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட ஒட்டு வில்லைகளை பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் இரா.முருகேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வி.வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை செய்தியாளர் D. தனசேகர்

VIDEOS

RELATED NEWS

Recommended