• முகப்பு
  • திருவண்ணாமலை மாவட்டம் தொலைத் தொடர்பு வசதியில் பின்தங்கியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் தொலைத் தொடர்பு வசதியில் பின்தங்கியிருக்கிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தின் அனைத்து குக்கிராமங்களிலும், ஜமுனாமரத்தூர், புதூர் நாடு, ஏலகிரி உள்ளிட்ட மலை பகுதிகளிலும் செல்போன் சிக்னல் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பு மக்களால் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை நாடாளுமன்றத்தில் 2 முறை கோரிக்கை வைத்ததோடு தொலைத் தொடர்புத் துறை உயர் அதிகாரிகளையும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். திருவண்ணாமலை தீபம் நகர் ஜங்சன் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய மேம்பாலத்தின் அருகில் நடைபெற்ற ஆய்வு பணியை சி.என்.அண்ணாதுரை எம்.பி. நேரில் பார்வையிட்டார். அப்போது பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் தனியார் செல்போன் கம்பெனி அலுவலர்கள் உடனிருந்தனர். இது குறித்து அவர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டம் தொலைத் தொடர்பு வசதியில் பின்தங்கியிருக்கிறது. தற்போது சாமான்ய மக்களும் செல்போன் மற்றும் இணையதளத்தை பயன்படுத்துகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தும் நிலை உருவாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைத் தொடர்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதை தொடர்ந்து புதிய செல்போன் டவர்கள் மற்றும் பழைய செல்போன் டவர்களின் திறன் மேம்படுத்துதல் பணிகள் தொடங்கி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதியை சேர்த்து சுமார் 70-க்கும் மேற்பட்ட புதிய செல்போன் டவர்கள் அமைக்கப்பட உள்ளது. செல்போன் சிக்னல் குறித்து 4 குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும், ஓரிரு மாதத்தில் புதிய செல்போன் டவர் அமைக்கும் பணிகள், 4 ஜி சேவை மேம்படுத்தும் பணிகள் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். திருவண்ணாமலை செய்தியாளர் பாலாஜி. இன்றைய செய்திகள் திருவண்ணாமலை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் திருவண்ணாமலை,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvannamalai news,General news,Latest tamil news,Breaking tamil news,Cell phone signal,bsnl 4g service

VIDEOS

RELATED NEWS

Recommended