• முகப்பு
  • sports
  • திருவள்ளூர்மாவட்ட மாணவ / மாணவியர்‌ கோடைக் கால சிறப்புவிளையாட்டு பயிற்சிமுகாம்‌.

திருவள்ளூர்மாவட்ட மாணவ / மாணவியர்‌ கோடைக் கால சிறப்புவிளையாட்டு பயிற்சிமுகாம்‌.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவள்ளூர்மாவட்ட நிர்வாகத்தால் மாணவ / மாணவியர்களுக்கிடையே விளையாட்டுத்திறனை நெறிப் படுத்த கோடைவிடுமுறையில் ஒருமுனைப்பு நடவடிக்கையாக விளையாட்டு பயிற்சிமுகாம் நடத்தப்படஉள்ளது. மாணவர்களின் விளையாட்டுத் திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் வகையில், இக்கோடைக் கால விளையாட்டுபயிற்சி முகாமில் தடகளம், கால்பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப்போட்டிகள்‌ நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களிடையே நல்லொழுக்கம், மாணவர்ஆசிரியர் நல்லுறவு, விளையாட்டு போட்டிகளின் மீதான ஆர்வம் ஆகியவைவளர்ப்பதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இப்பயிற்சிமுகாம் திருவள்ளூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாவட்டவிளையாட்டு மைதானத்தில் நடை பெற உள்ளது. விளையாட்டு பயிற்சிக்கான தேர்வுகள்‌ திருவள்ளூர்‌மாவட்ட தமிழ்நாடு விளையாட்டுமேம்பாட்டு ஆணையம் ( SDAT ) மைதானத்தில் 23. 05. 2022 மற்றும் 24. 05. 2022 ( திங்கள் மற்றும் செவ்வாய் ) ஆகியத்தேதிகளில் நடைபெறவ உள்ளது. 10 வயது முதல்‌ 17 வயதுக்கு உட்பட்ட மாணவ / மாணவிகள் தங்கள் ஆதார்அட்டை மற்றும் புகைப்படத்துடன் பதிவுசெய்து கலந்துகொள்ளலாம். முகாமில் பதிவுசெய்து, போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பாக திறமையினை வெளிப் படுத்துவோரில் தகுதி வாய்ந்த 200 நபர்கள் தேர்வுசெய்யப்பட்டு சர்வதேசஅளவில் வெற்றிபெற்ற வீரர்கள்‌, விளையாட்டுபயிற்றுநர்கள்‌ மற்றும்‌ உடற் கல்வி ஆசிரியர்களை கொண்டு 15 நாட்களுக்கு பயிற்சிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உணவு ‌வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு திறனை வெளிப் படுத்த இதனை ஒரு வாய்ப்பாக பயன் படுத்திக்கொள்ள திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்‌ தலைவர் டாக்டர்‌. ஆல்பிஜான்‌ வர்கீஸ்‌ இ.ஆ.ப., தெரிவித்து உள்ளார்‌. பதிவுசெய்ய: http://tiny.cc/tlrsports. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended