• முகப்பு
  • tamilnadu
  • ரேஷன் கடை உணவு பொருட்களை வழங்குவதில் மாற்றம் வருகிறது.

ரேஷன் கடை உணவு பொருட்களை வழங்குவதில் மாற்றம் வருகிறது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குடும்ப அட்டைதாரர்களுக்கு மிக மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ரேஷன்கடைகளில் அரிசி, பருப்பு., சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார். விரைவில் அரிசி, பருப்பு , சர்க்கரை போன்றவை பாக்கெட்டில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப் படும். அனைத்து குடோனுக்கும் கோடுசிஸ்டம் கொண்டுவர உள்ளது. இதன்மூலம் அரிசி எங்கிருந்து கடத்தப் படுகிறது என்பது அனைத்தும் தெரியவந்துவிடும். பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்ததிலிருந்து என்னபொருட்கள் வழங்கப் படுகிறது என்பது தெளிவாகத்தெரிய வருகிறது. இதனால் கடத்தல் என்பது குறைந்துவருகின்றது. மேலும் ரேஷன்கடைகளில் முறைக்கேடு நடந்தால் 1967 என்ற இலவச அழைப்பிற்கும் , 1800 425 5901 எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி

VIDEOS

RELATED NEWS

Recommended