• முகப்பு
  • district
  • புது பொலிவாக காட்சியளிக்கும் தேனி உழவர் சந்தை.

புது பொலிவாக காட்சியளிக்கும் தேனி உழவர் சந்தை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி: திமுக ஆட்சியில் தேனி உழவர் சந்தை ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பொலிவு பெற்றுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கலைஞர் முதல்வராக கடந்த 1996ம் ஆண்டில் இருந்தபோது தமிழகம் முழுவதும் உழவர் சந்தைகளை திறந்தார்.விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து எந்தவெரு இடைத்தரகருமின்றி காய்கறிகளை விற்பனை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இடைத்தரகரில்லாத விற்பனையென்பதால் உழவர் சந்தையில் காய்கறிகளின் விலை வெளிசந்தைகளை காட்டிலும் குறைவாக இருப்பதால் பொதுமக்களிடையே பெரும் ஆதரவினை பெற்றது இத்திட்டத்தில் காய்கறி கடை அமைக்கும் விவசாயிகளிடம் வாடகை வசூலிப்பது கிடையாது என்பதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் உழவர் சந்தைகள் முறையான பராமரிப்பின்றி புதர்மண்டி போனது. இதனால் சந்தைக்கு வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலன் புறக்கணிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் உழவர் சந்தைகள் மீண்டும் புத்துணர்ச்சியுடன் செயல்பட நடவடிக்கை எடுத்தார். இதன்படி, தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக 50 சந்தைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இதன்படி, தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 உழவர் சந்தைகளில், முதற்கட்டமாக தேனி உழவர் சந்தைக்கு ரூ.24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிதி மூலமாக தேனி உழவர் சந்தையில் அலுவலக அறை தரைத்தளம் டைல்ஸ் பதிக்கப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டது. உழவர்சந்தையில் கடைகளுக்கு முன்பாக பேவர் பிளாக் சாலைகள் அமைக்கப்பட்டும், கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், நீண்டநாட்களாக செயல்படாமல் இருந்த போல்வெல் சீரைமைக்கப்பட்டுள்ளது. உழவர் சந்தை முழுமையாக வெள்ளையடித்து புதுப்பொழிவேற்றப்பட்டுள்ளது. இதனால் உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினமும் 35 டன் காய்கறிகள் விற்பனை தேனி மாவட்டத்தில் தேனி, கம்பம், பெரியகுளம், சின்னமனூர், போடி உள்ளிட்ட 7 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இதில் தேனி உழவர் சந்தையில் நாள்தோறும் சுமார் 70 வியாபாரிகள் கடைகளை அமைத்து அனைத்து வகையான காய்கறிகளையும் விற்பனை செய்வர். நாளொன்றுக்கு தேனி உழவர் சந்தையில் சுமார் 35 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்படும். தேனி மாவட்ட செய்தியாளர் MP.ஜீவா.

VIDEOS

RELATED NEWS

Recommended