இடம் பிரச்சனை காரணமாக சிறுமி கையை கத்தியால் வெட்டி விட்டு ஓடிய இளைஞன்.
குமரவேல்
UPDATED: May 21, 2023, 7:39:53 AM
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட வான்பாக்கம் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த துரைக்கண்ணு மகன் ரஞ்சித் (19 ) என்பவருக்கும் அதே பகுதியைசேர்ந்த குமார் மகளான சத்யா (17) என்பவர் வீட்டிற்கும் இடப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளதாக தெரிகிறது.
அதன் காரணமாக கடந்த 18ந்தேதி அன்று மாலை ரஞ்சித் என்பவர் சத்யாவின் வலது கையில் கத்தியால் கிழித்து விட்டதாக தெரிகிறது.
இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் மேற்படி ரஞ்சித்மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்த நிலையில் இன்று நெல்லிக்குப்பம் போஸ்ட் ஆபீஸ் அருகே நின்றிருந்த ரஞ்சித்தை காவல் உதவி ஆய்வாளர் சந்தோஷ் தலைமையிலான போலீசார் பிடித்தனர்.
பின்னர் மேற்படி நபர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.