• முகப்பு
  • crime
  • தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ் மீது அவர் மனைவி ஆட்சியரிடம் புகார்.

தூத்துக்குடி பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ் மீது அவர் மனைவி ஆட்சியரிடம் புகார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 9:59:01 AM

தூத்துக்குடி ராஜா கோபால் நகர் எட்டாவது தெருவில் குடியிருந்து வரும் ராஜகோபால் மகள் கிரேசி விஜயா பெற்றோருடன் வசித்து வருகிறார். தூத்துக்குடி மடத்தூர் பகுதியைச் சேர்ந்த பறக்கும் படை வட்டாட்சியர் ஆக பணியாற்றி வரும் ஞானராஜ் என்பவருடன் 2008 ஆம் ஆண்டு திருமணமானது, திருமணத்திற்கு பின்பு ஞான ஜெரீஸ் என்ற மகனும் பியோனா மரியா என்ற மகளும் உள்ளன, குழந்தைகள் மறவன் மடத்தில் உள்ள பள்ளியில் 9 மற்றும் ஏழாம் வகுப்பு படித்து வருகின்றனர். பறக்கும் படை தாசில்தார் ஞானராஜ்க்கு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் உடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு 23.6.2021 அன்று ஞானராஜ் என்னை அடித்து காயப்படுத்தியதால் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சைக்குப் பின்பு எனது 2 குழந்தைகளுடன் தாயார் வீட்டில் குடியிருந்து வருகிறேன். ஞான ராஜ் மீது நான் பலமுறை காவல்துறையிலும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கும் புகார் கொடுத்து வந்துள்ளேன், இந்த நிலையில் குழந்தைகளை என்னிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்து 2.3.2022 அன்று பள்ளிக்கு சென்று வீடு திரும்ப எனது குழந்தைகள் இருவரையும் கடத்தி சென்று விட்டார் எனது கணவர் ஞானராஜ். இதனை அடுத்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, அதன் பின்பு புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் எனது கணவர் தாசில்தார் ஞானராஜ் மீது காவல் நிலையத்தில் பெண்கள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற எண் 3ல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையில் நீதிமன்றம் குழந்தைகளை நீதிபதி முன்பு நான்கு முறை ஆஜர் படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தோம், தாசில்தார் நாகராஜ் குழந்தைகளை நீதிபதி முன்பு அழைத்து வராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனை அடுத்து நீதிபதி கடந்த 8ம் தேதி இரு குழந்தைகளும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார், அந்த உத்தரவின்படி எனது குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு சென்று குழந்தைகளை என்னுடன் அனுப்புமாறு பள்ளியின் முதல்வரிடம் கேட்டபோது குழந்தைகளை என்னுடன் அனுப்பாமல் எனது கணவர் தாசில்தார் நாகராஜுக்கு தகவல் கொடுத்து அவரை வரவழைத்து எனது குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்காமல் எனது கணவருடன் அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின்பு நான் எனது கணவர் தாசில்தார் ஞானராஜ் வீட்டு முன்பு அமர்ந்து இரவு 7:30 மணி வரை காத்திருந்தேன் எனது குழந்தைகளை அழைத்துச் சென்ற தாசில்தார் ஞானராஜ் வராததால் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எனது குழந்தைகளை நீதிமன்ற உத்தரவின் படி மீட்டு தரும்படி புகார் அளித்தேன். மேலும் எனது கணவர் வட்டாட்சியராக பணிபுரிந்து கொண்டு நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமல் நீதிமன்றத்திற்கு குழந்தைகளை அழைத்து வராமலும், நீதிமன்றத்தின் உத்தரவின்படி குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்காமலும், நீதிமன்றத்தின் உத்தரவை அலட்சியப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தாசில்தார் ஞானராஜ் அரசு ஊழியர் சங்கத்தில் பொறுப்பில் இருப்பதாலும் அரசியல் மற்றும் அதிகார பலம் உடையவர் என்பதாலும் எனது குழந்தைகளை என்னிடம் ஒப்படைக்காமல் நீதிமன்ற உத்தரவை அனுமதித்து வருகிறார். இதனால் எனது இரண்டு குழந்தைகளின் உடல்நிலையும் கல்வியின் நலனும் பாதிக்கப்பட்டு வருகிறது, ஆகையால் நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகள் நல குழுமம் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அழகு தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தங்களுடைய அலுவலகத்தில் வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் ஞானராஜ் நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காமலும், குழந்தைகளின் நலனை பாதுகாப்பையும் பேணி காக்காமலும் உள்ளதால் வட்டாட்சியர் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின்படி நடவடிக்கை எடுத்து இரு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தாசில்தார் நாகராஜன் மனைவி மனு அளித்துள்ளார். அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் புகார் மனு மீது கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வழக்கு விசாரணை என்பது நீதிமன்றத்தில் ஆஜராகுவதற்கு அரசு வாகனத்தில் வந்தது தொடர்பாகவும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வட்டாட்சியர் ஞானராஜ் மனைவியிடம் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உறுதி அளித்தார். உடன் வழக்கறிஞர் அதிசய குமார் தன் வழக்கறிஞர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார், பின்பு செய்தியாளர்களிடம் கிரேசி விஜயா கூறுகையில் நான் முதன் முதலில் இது தொடர்பாக எனது கணவர் வட்டாட்சியர் ஞானராஜ் புகார் ஆளான போது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளித்திருந்தேன், ஆரம்பத்திலேயே புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய நிகழ்வுகள் நடைபெற்று இருக்காது தொடர்ந்து எனது கணவர் வட்டாட்சியருக்கு மாவட்ட நிர்வாகம் ஆதரவு கரம் நீட்டி வருகிறது. நீதிமன்ற உத்தரவின் படி இரண்டு குழந்தைகளையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் அதுபோல எனது கணவர் வட்டாட்சியர் ஞானராஜ் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்குகளில் இதுவரை முன் ஜாமின் பெறாமல் உள்ளார் வழக்கு பதிவு செய்யப்பட்டது அடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று கூறினார். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகள் மீது இருவருக்குமே சம உரிமை உள்ளது என்பதை இருவருமே மறந்துவிட்டு செயல்படுவதால் தான் இப்படி பிரச்சினைகள் ஏற்படுகின்றது. தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர் மாரிமுத்து.

VIDEOS

RELATED NEWS

Recommended