• முகப்பு
  • crime
  • சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை.

சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்பிலான உலோகத்தினால் ஆன நாகலிங்க சிலை, திருவாட்சியுடன் கூடிய அம்மன் சிலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் ராம்நகர் பாலம் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொது, சாலையோரம் நின்று கொண்டிருந்த இரு வாலிபர்கள் இவர்களை கண்டவுடன் தப்பியோட முயன்ற போது, அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்த போது, அவர்கள், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் குருசேவ் (42) என்றும், மற்றொருவன் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம், கொரநாட்டு கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் பவன்ராஜ் (36) என்பதும் தெரியவந்தது, அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின்னாக பேசியதை தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதையடுத்து, பவுன்ராஜ் சாலையின் ஒதுக்குபுறமாக மறைத்து வைத்திருந்த கோனிபையின் உள்ளே வெள்ளை நிற துணியில் மறைக்கப்பட்டிருந்த 37 செ.மீ உயரம், 23 கிலோ எடையில் உலோகத்தினால் ஆன நாகலிங்கம் சிலை, 29 செ.மீ உயரம் சுமார் ஐந்து கிலோ எடையில் திருவாச்சியுடன் கூடிய உலோக அம்மன் சிலை, மற்றும் 43.5 செ.மீ உயரம் சுமார் 5 கிலோ எடையில் உலோகத்தலான இரு பாவை விளக்கு சிலைகளை ஆகியவற்றை எடுத்து காண்பித்தார்கள் மேற்கண்ட சிலைகள் ஏதேனும் கோவிலில் திருடி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கலாம் என தெரியவருகிறது, இதனை தொடர்ந்து அந்த சிலைகளை கைப்பற்றி பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, சிலை திருட்டு வழக்குகள் குறித்து விசாரிக்கும், கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தி பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு பின்னர் அவை உலோக திருமேனி பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவிடப்பட்டது. இச்சிலைகள் குறித்து தொன்மை அறிய தொல்பொருள் ஆய்வுத்துறையினரிடம் அணுகவும், தொடர்ந்து இச்சிலைகள் எங்கிருந்து எப்போது திருடப்பட்டது என்பது குறித்தும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended