• முகப்பு
  • world
  • பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருப்பதாக உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருப்பதாக உலக தமிழர் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள கருத்தை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 2:03:55 PM

இந்தியாவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கேள்விகளுக்கு கருத்துரைக்கும் போதே பழ.நெடுமாறன் இந்த தகவல்களை வெளியிட்டு இருக்கின்றார். இந்த தகவல் தமிழ் மக்கள் மத்தியில் புதிய தெம்பினை ஏற்படுத்திருப்பதாக சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தபொழுதும் தொடர்ந்து பிரபாகரன் தொடர்பில் பல்வேறு தரப்புகள் இந்தியாவிலிருந்து தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அதனை இலங்கை ராணுவம் முற்றாக நிராகரித்திருக்கிறது. இறுதி யுத்தத்தின்போது பிரபாகரன் கொலை செய்யப்பட்டதாகவும் அதற்கு போதுமான சான்றுகள் தங்களிடம் இருப்பதாகவும் ராணுவம் தெரிவித்திருப்பதும் இங்கு பார்க்கப்பட வேண்டிய ஒன்றாக இருக்கின்றது. அதைவிட தமிழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை இலங்கையில் இருக்கின்ற தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஏற்கனவே உறுதிப்படுத்தி இருந்தனர். மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் உடைய கிழக்கு மாகாண பொறுப்பாளர் கருணா அம்மன் அப்போது ராணுவத்தினருடன் சென்று பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதை இலங்கையின் ராணுவ தரப்பில் பேசவல்ல பிரக்கேடியர் ரவி ஹேரத் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். 2009 ஆண்டு மே மாதம் பிரபாகரன் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்டதாகவும் அவரது மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதற்கான ஆதாரங்களும் ஆவணங்களும் தங்களிடம் இருப்பதாகவும் பிரிக்கேட்டியர் ரவி ஹேரத் மேலும் தெரிவித்து இருக்கின்றார். இருந்தபொழுதும் உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்திருக்கின்ற கருத்து இன்றைய ஊடகங்களில் பிரதான பேசும் பொருளாக மாறி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended