• முகப்பு
  • district
  • எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற நபர் ?

எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்ற நபர் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மகாராஷ்டிரா : பெட்ரோல், டீசல் விலை உயர்வால் தற்போது இந்தியாவில் பலருக்கும் மின்சார வாகனத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது . கடந்த சில காலங்களாக எலக்ட்ரிக் மின்சார வாகனங்களில் தீ விபத்து, பழுது என நாளுக்கு நாள் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் சச்சின் கிட்டே என்பவர் ஓலா மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார். இந்த மின்சார வாகனம் வாங்கிய ஆறாவது நாளில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து இது தொடர்பாக நிறுவனத்திடம் கேட்டபோது முறையாக பதில் எதுவும் கிடைக்காத நிலையில் விரக்தி அடைந்தார். இதனால் அவர் வாங்கிய ஸ்கூட்டரில் கழுதையை கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்று கழுதை மற்றும் வாகனத்தின் முகப்பில் ஒரு அட்டையை தொங்க விட்டிருந்தார். அதில் ஓலா நிறுவனத்திடம் ஜாக்கிரதையாக இருங்கள் வாகனத்தை யாரும் நம்பி வாங்காதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் கூறுகையில் வாங்கிய வாகனம் ஆரு நாட்களே ஆன நிலையில் பல முறை பழுது ஏற்பட்டுள்ளது. ஓலா சர்வீஸ் சென்டர் செய்த சோதனையும் சரியாக இல்லாததால், அதிருப்தியில் உள்ளார். செய்தியாளர் பா. கணேசன் இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,maharastra news,maharasthra latest news,maharasthra todays tamil news,The person who tied the donkey on the electric scooter and dragged it in procession,ola electric scooter

VIDEOS

RELATED NEWS

Recommended