• முகப்பு
  • district
  • தியாகதுருகம் அருகே ஏரி புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்கள்.

தியாகதுருகம் அருகே ஏரி புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆக்கிரமிப்பாளர்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே, பிரிதிவிமங்கலம் கிராம எல்லைப் பகுதியில் ,புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து பலரும் கடைகள் வைத்திருந்த நிலையில் , ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத நிலையில் , தியாகதுருகம் காவல்துறையினர் உதவியுடன் ஆக்கிரம்புகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வருவாய்த்துறையினர் ஆக்கிரம்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரம்பாளர்கள் மேலும் ஒரு வாரம் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரி வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது . இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும்,ஏற்கெனவே போதிய அவகாசம் வழங்கப்பட்டு விட்டதாகவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினரின் உதவியுடன் வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended