• முகப்பு
  • district
  • ஸ்ரீமுஷ்ணம் அருகே வீராணம் ஏரிக்கரையில் பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெறும் அவலநிலை அரசு அதிகாரிகளின் அலட்சியமா .

ஸ்ரீமுஷ்ணம் அருகே வீராணம் ஏரிக்கரையில் பாலம் பணி ஆமை வேகத்தில் நடைபெறும் அவலநிலை அரசு அதிகாரிகளின் அலட்சியமா .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட சோழதரம் அடுத்த வீராணம் ஏரிக்கரையில் பாலம் அமைப்பதற்காக கடந்த ஓராண்டுக்கு முன்பு சுமார் 50 லட்சத்திற்கு மேல் பொதுப்பணித்துறையினர் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த ஓராண்டு காலமாக ஆமை வேகத்தில் வேலை நடைபெறுகிறது. அலட்சியமாக செயல்படும் அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுப்பார்களா , அதோடு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கருவேட்டை ஓடை வழியாக பெரியகிருஷ்ணாபுரம், கொண்டசமுத்திரம் , ஆண்டிபாளையம் வழியாக புதுஏரி நிரம்பி மாமங்கலம் வழியாக வீராணம் ஏரி சென்றடையும். இதனால் ஏரிகள் குளங்கள் நிரம்பி விவசாயத்திற்கு பாசனம் செய்து வருவது வழக்கம், பெருத்த மழை காலங்களில் கிராமப்புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்காமல் இருப்பதற்கு வடிகால் வாய்க்கால் அமைத்து வீராணம் ஏரிக்கு உபரி நீரை வீராணம் ஏரியில் கலந்துவிடும். இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் செல்வது வழக்கம் ஓராண்டு காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றது , பருவமழை வருவதையொட்டி விரைவில் வாய்க்கால் தூர்வாரி தண்ணீர் நேரடியாக வீராணம் ஏரியில் கலப்பதற்கு பாலம் அமைக்கும் பணி விரைவில் முடித்து தருமாறு அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொள்கின்றனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended