அமைச்சர் முன்பு பயங்கர வாக்குவாதம் ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டு சட்டமன்ற தொகுதி சோம்பட்டு கிராமத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி மக்களிடம் உரையாற்றி அவர்களின் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து ஆங்கிலத்தில் பேசவா, ஹிந்தியில் பேசவா, அல்லது தெலுங்கில் பேசவா என்று கேட்கிறார், அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் யாரும் பதில் சொல்லாததால்,,, பாஜக மாநில தலைவர் சாமிநாதன் பின்னால் நின்றிருந்த பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அம்மாவாசை அதை நான் தமிழாக்கம் செய்வதாக கூறுகிறார்.. இதனை அடுத்து மீனாட்சி லேகி பேசும்போது.. மைக்செட் வேலை செய்யவில்லை இதனால் தொடர்ந்து பத்து நிமிடம் வரை மைக் செட் வேலை செய்யாததால் மைக்கை தட்டியபடியே சரி செய்யுங்கள் என்று கூறுகின்றார் இதனை அடுத்து மன்னாடிப்பட்டு தொகுதி சோம்பட்டு கிராம மக்களிடம் ஆங்கிலத்தில் உரையாற்றினார். மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசியதை பாஜக பிரமுகரும் வழக்கறிஞருமான அம்மாவாசை தமிழாக்கம் செய்கிறார். உடனே அவர் தமிழாக்கம் செய்ததில் தவறு இருந்ததாகக் கூறி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் வழக்கறிஞர் அம்மாவாசையுடன் மத்திய இணையமைச்சர் முன்பு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அப்போது இருவரும் அமைச்சர் முன்பு பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர் அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இதனையடுத்து கூட்டத்தை புறக்கணித்து பாஜக பிரமுகர் வழக்கறிஞர் அம்மாவாசை மேடையில் இருந்து இறங்கி சென்று விட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி நலத்திட்ட உதவிகளை வழங்கி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். மோடியின் 8-ஆண்டு சாதனை குறித்தும் கிராம மக்களுடன் உரையாடல் நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி, உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர். பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

RELATED NEWS

Recommended