• முகப்பு
  • tamilnadu
  • கலைப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 10 ஆம் தேதி கடைசி நாள்.

கலைப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 10 ஆம் தேதி கடைசி நாள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மாமல்லபுரத்திலுள்ள அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக்கலை கல்லுாரியில் கலைப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இம்மாதம் 10 ஆம் தேதி கடைசி நாள். ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலையுடன் இணைக்கப் பட்டுள்ள, மாமல்லபுரம் அரசு கட்டடக் கலை மற்றும் சிற்பக் கலைக்கல்லுாரியில், பி. டெக்., மரபுக்கட்டடக்கலை, பிஎப்ஏ., மரபு சிற்பக் கலை மற்றும் மரபு ஓவியம், வண்ணப் படம் ஆகிய பிரிவுகளில் சேரலாம். இதற்கான விண்ணப்ப வினியோகம், www.artandculture.tn.gov.in என்ற இணையதளத்தில் துவங்கி உள்ளது. பிளஸ் 2 முடித்த, 26 வயதுக்கு உட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, 'முதல்வர், அரசு கட்டடக்கலை மற்றும் சிற்பக் கல்லுாரி, மாமல்லபுரம் அல்லது இயக்குனர், கலை பண்பாட்டுத் துறை, சென்னை - 8' என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended