• முகப்பு
  • அரசியல்
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கீழையூர் ஒன்றியம் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்ததை முன்னிட்டு பாராட்டு விழா.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கீழையூர் ஒன்றியம் தமிழ்நாட்டிலேயே முதலிடம் பிடித்ததை முன்னிட்டு பாராட்டு விழா.

செ.சீனிவாசன்

UPDATED: May 15, 2023, 6:00:15 AM

2022-23ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை பொதுமக்கள் பயனடையும் வகையில் நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் தமிழ்நாட்டிலேயே அதிக குடும்பங்களுக்கு வேலை அளித்த ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பிடித்துள்ளது.

இது தொடர்பான புள்ளி விவர அறிவிப்பு அண்மையில் இணையதளம் வாயிலாக வெளியானது. இதில் கீழையூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 27 ஊராட்சிகளை சேர்ந்த 6947 குடும்பங்களுக்கு 100 நாட்கள் முழுமையாக வேலை வழங்கி உள்ளதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராட்டு விழா ஒன்றிய பெருந்தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாத்தி ஆரோக்கியமேரி , வெற்றிச்செல்வன் ஆகியோர் ஊராட்சியில் பணிபுரியும் பணித்தள பொறுப்பாளர்கள், மக்கள் நல பணியாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட பலருக்கும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களை சிறப்பித்து பரிசு பொருட்கள் வழங்கினார.

இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, ஒன்றிய பொறியாளர்கள்‌ ரவிச்சந்திரன், லவ் வெற்றிவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கீதா ,ராஜகண்ணன், கோவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended