• முகப்பு
  • சென்னை
  • இஸ்லாமியருக்கு நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் இஸ்லாமியருக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை.

இஸ்லாமியருக்கு நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காததால் இஸ்லாமியருக்கு தொகுதி ஒதுக்க முடியவில்லை.

நெல்சன் கென்னடி

UPDATED: Mar 27, 2024, 8:36:30 PM

சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்யமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் :

இந்தியாவில் உள்ள செல்வத்தில் 60% சொத்துக்களை 5% பேர் வைத்துள்ளனர் என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதற்கு மோடி பதில் சொல்ல வேண்டும்.  OBC, Sc, ST பிரதிநிதி துவத்தை மேம்படுத்த மோடி அரசு எதுவும் செய்யவில்லை.

எஸ்.சி., எஸ்.டி. துணை திட்டம் புதுப்பிக்கப்படும் .. எஸ்.சி., எஸ்.டி.க்கான பட்ஜெட் அறிவிக்கப்படும், மக்கள் தொகை அளவை கணக்கில் கொண்டு பட்ஜெட் தயாராகும். வனச்சட்டத்தை திருத்தம் செய்து பழங்குடியினருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து பழங்குடியினருக்கு எதிரான சட்டங்களும் திரும்பப் பெறப்படும். 

விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் மோடி அரசு கை வைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டவடிவம் கொடுக்கப்படும்

ராஜிய சபா பதவி 5 ஆண்டுகள் இருக்கும் எல்.முருகனை எதற்காக நிலகிரியில் வேட்பாளராக அறிவித்தீர்கள்.. ஆளுநராக இருந்த தமிழிசை ஏன் பதவி விலகினார்..  

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

நிர்மலா சீதாராமன் திருச்சியில் பிறந்தவர் ஏன் அவருக்கு திருச்சியில் ஏன் சீட் கொடுக்கவில்லை? தென் சென்னையில் பிறந்த ஜெய்சங்கரை ஏன் தென் சென்னையில் நிறுத்தவில்லை? ஜெய்சங்கருக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் ஒரு நீதி, பிற்படுத்தப்பட்ட இனத்தில் பிறந்த தமிழிசை சௌந்தர்ராஜனுக்கு ஒரு நியதியா? இதுதான் பாசிச பாஜக. நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கரையும் மேட்டுக்குடிகளாக வைத்துள்ளார்கள்.. பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தமிழிசையை வெயிலில் வாக்கு சேகரிக்க அனுப்பியுள்ளார்கள்.

பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போது தேர்தல் பத்திரம் தொடர்பாக பேச வேண்டும். சி.ஏ.ஜி. அறிக்கையிலும் ஊழல். இது தொடர்பாகவும் மோடி பதில் சொல்ல வேண்டும். 2ஜி வரும் பொழுது பேசிய மோடி சிஏஜி அறிக்கை பற்றி பேசவில்லை. 

எங்களின் 9 வெற்றி வேட்பாளர்களும் களத்தில் இருக்கிறார்கள். சமூக நீதி அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளோம். கடந்த முறை சிறுபான்மையின மக்களுக்கு தொகுதி ஒதுக்காமல் விடுபட்டிருந்தது..

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

நாங்கள் ஒரு கிறிஸ்தவருக்கும் முஸ்லிமுக்கும் தொகுதிகள் ஒதுக்க முயற்சி செய்தோம். ஒரு கிறிஸ்தவருக்கு தொகுதி ஒதுக்கி உள்ளோம். ஆனால் இஸ்லாமியருக்கு ஒதுக்க முடியவில்லை. அதற்கு ஏற்ற வகையில் நாங்கள் கேட்ட தொகுதி கிடைக்கவில்லை.

ஆனால் எங்கள் கூட்டணியில் உள்ள ஐ.யு.எம்.எல்., சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார்கள். சிறுபான்மையின மக்களின் சார்பில் ஒரு கிறிஸ்தவருக்கு தொகுதியை ஒதுக்கி உள்ளோம். சமூக நீதி என்றால் எங்கள் இயக்கம்தான். 

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

ராகுல் காந்தியும், முதலமைச்சரும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க உள்ளார்கள். விரைவில் சுற்றுப்பயண விவரத்தை வெளியிடுவோம்.

VIDEOS

RELATED NEWS

Recommended