• முகப்பு
  • குற்றம்
  • திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்.

ராஜ் குமார்

UPDATED: Mar 27, 2024, 7:38:56 PM

சதீஷ்குமார் ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் பகுதியைச் சார்ந்தவர், இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு காலில் தழும்புவுடன் அரக்கோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Also Watch : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் சின்னம் ஒதுக்கப்படாதது ஏன்? - துரை.வைகோ

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் அரசு பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இவரை அனுமதிக்க வந்த இவரது மனைவி மாற்றுத் திறனாளி ஆவார்

ஆகவே இவரை மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்த பிறகு அவர் சென்று விட்டதாக கூறினார்

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

பிறகு இவருடன் யாரும் இல்லாததால் மருத்துவ நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று உனக்கு சிகிச்சை அளிக்கப்படாது என்று கூறி அழுகிய காலோடு இருந்த சதீஷ்குமாரை மருத்துவர்கள் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்களைக் கொண்டு மருத்துவமனை முன்புள்ள மதில் சுவர் அருகில் கீழே படுக்க வைத்து சென்றுள்ளனர்.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

சதீஷ்குமார் இவர் பி.ஏ பட்டதாரியும் ஆவார் இவருக்கு நடக்க முடியாத சூழ்நிலையில் சாலை அருகே ஓரத்தில் கீழே படுக்க வைத்து  சென்றதால் அங்கு அவருக்கு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து வருகின்றனர்

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

இதுகுறித்து பொதுமக்களும் ஆட்டோ டிரைவர்களும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கூறியும் கண்டுகொள்ளாதது அங்குள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended