• முகப்பு
  • aanmegam
  • கும்பகோணம் சூரியனார் கோயிலில் ஆடி 1ம் தேதி முன்னிட்டு மகா அபிஷேகம்.

கும்பகோணம் சூரியனார் கோயிலில் ஆடி 1ம் தேதி முன்னிட்டு மகா அபிஷேகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் அடுத்து உள்ள சூரியனார் கோயிலில் நவக்கிரகங்களுக்கென்று பிரத்தியேகமாக அமைந்துள்ள உஷா தேவி சாயா தேவி உடனாய சிவசூரிய பெருமாள் கோயில் உள்ளது. இங்கு சூரியனை மூலவராகக் கொண்டும் சூரியனை பார்த்தவாறு குரு பகவானும் ஏனைய கிரகங்கள் சூரியனைச் சுற்றியும் நவகிரகங்கள் தனித்தனி வாகனத்துடன் தனி சன்னதி கொண்டுள்ளது. கோவிலின் தனி சிறப்பாகும். சிறப்பு பெற்ற திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 1ம் தேதி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது வழக்கம் தொடர்ந்து கொரோனா தொற்றால் 2 ஆண்டுகள் பிறகு இவ்வாண்டு ஆடி 1ம் தேதி முன்னிட்டு உஷா தேவி சாயா தேவி உடனாய சிவ சூரிய பெருமானுக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்று பால் தயிர் இளநீர் பன்னீர் சந்தனம் மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான வாசனாதி திரவியங்களை கொண்டு மகா அபிஷேகமும் புனித நீர் கட அபிஷேகமும் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்த அபிஷேகத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது குடும்பத்தினருடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended