• முகப்பு
  • அரசியல்
  • தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம் - எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் முபாரக்அலி.

தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம் - எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் முபாரக்அலி.

JK 

UPDATED: May 5, 2023, 7:33:10 PM

வணிகத்தை வளமாக்குவோம், வணிகர்களை பலமாக்குவோம் முதல் மாநில மாநாடு வர்த்தகர் அணியின் மாநில தலைவர் கிண்டி அன்சாரி தலைமையில் திருச்சி மத்திய அருகே உள்ள தனியார் அரங்கில்  நடைபெற்றது.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு விசிக பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொக்கையாசேக் முகமது, ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  

மாநாட்டில் மாநில பொதுச்செயலாளர் ஜாஃபர் அலி உஸ்மானி மாநில துணைத் தலைவர்கள் எஸ்.எம்.ரஃபீக் அகமது, அப்துல் ஹமீது, மாநில செயலாளர் ரத்தினம் திருச்சி மாவட்ட தலைவர் அப்துல் மாலிக், தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. தலைவர் முபாரக் அலி மற்றும் தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான வர்த்தகர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து ஒன்றிய அரசு ஜி.எஸ்.டி. மூலமாக பெறும் அதிக அதிகப்பட்ச வரிவிதிப்பை பரிவுடன் பரிசீலித்து மறுபரிசீலனை செய்து, குறைந்தபட்ச வரிஅமைப்பாக மாற்றி அமைத்து, நாட்டின் 60% சதவீதத்திற்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை செழுமைப்படுத்தித் தர வேண்டும், 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறுகுறு தொழில்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்வதோடு, அந்த துறையை பாதுகாக்க புதிய வங்கிக் கடன்களை எளிய முறையில் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,

வணிக வரித்துறை அதிகாரிகள் சமீபகாலமாக ஸ்பாட்ஃபைன் (Spotfine) என்ற முறையை தீவிரமாக செயல்படுத்துவதால் வியாபாரிகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகிறார்கள். 

முறையாக வரி செலுத்தும் வியாபார நிறுவனங்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக சில அதிகாரிகள் வேண்டுமென்றே அபராதங்களை விதித்து வருகின்றார்கள். 

இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டியளித்த எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் முபாரக் அலி,

கேரளா ஸ்டோரி திரைப்படத்தை கேரளா மாநிலம் தடை செய்யும் வரை காத்திருக்காமல் உடனடியாக தமிழக அரசு இந்தப் படத்தை திரையிடுவதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். கேரளா ஸ்டோரி தி திரையிடப்படும் திரையரங்கம் முன்பு கண்டிப்பாக போராட்டம் நடத்துவோம்.

ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு அரசியலை தேவையற்ற கருத்துக்களை தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார், இதை கண்டிக்கிறோம்.

உடனடியாக தமிழக ஆளுநர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பு மற்றும் பாஜகவுடன் இணைந்து அரசியல் பேச தொடங்கலாம் தவிர ஆளுநர் பதவியில் இருந்து பேசுவது அநாகரிகம் அற்ற செயல் இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆளுநர் இல்லாத தமிழகத்தை நோக்கி தமிழக மக்கள் முன்னேறி கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார் ஆனால் அவருடைய திட்டங்களுக்கு அரசு அதிகாரிகள் உறுதுணையாக இல்லை என்பதே தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

ஆகையால் அரசு அதிகாரிகளை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் மக்களுக்கு குற்றங்களை செயல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கையை வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் சிறு குறு வணிகர் மீது அடாவடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளின் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எங்கள் கட்சி சார்பாக பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறோம் தேர்தல் நெருங்கும் நேரத்தில் உரிய அறிவிப்பினை நிச்சயமாக அறிவிக்கப்படும் குறிப்பாக பாஜகவை தமிழகத்தில் நுழையவிடாமல் இருப்பதற்காக எந்த திட்டங்களையும் நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended