• முகப்பு
  • அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திமுகவினர் நெல் மூட்டைகளை மட்டும் கொள்முதல் செய்வதால் மற்

அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திமுகவினர் நெல் மூட்டைகளை மட்டும் கொள்முதல் செய்வதால் மற்

Entertainment

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பலராலும் போற்றப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் அரசு நேரடி கொள்முதல் மையத்தில் விற்பனை செய்ய முடியாமல் வேதனைப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் கம்பம் பகுதியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் இயங்கி வருகின்றது. தற்போது குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். சித்தாத்தூர் ,இளையனார்வேலூர், வெள்ளிமேடு ,காவாந்தண்டலம், தம்மனூர் ,கண்ணடியான் குடிசை,நெய் குப்பம் ,அங்கன்பாக்கம், கிருஷ்ணாபுரம் , அவளூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் குறுவை சாகுபடி செய்த நெல் மூட்டைகளை கம்பராஜபுரம் அரசு நேரடி கொள்முதல் மையத்தில் பித்தளை செய்ய இயலாமல் பரிதவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் திமுக கட்சியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் நெல் மண்டி வைத்துள்ள ஏஜெண்டுகள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் வைத்துள்ள மற்றும் விலை குறைவாக வெளி சந்தையில் வாங்கிய நெல் மூட்டைகளை கம்பராஜபுரம் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து லாபம் ஈட்டுகின்றனர். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பல விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி கொள்முதல் மையத்துக்கு எடுத்துச் சென்றால் இன்று நாளை என காலம் கடத்தி வருகின்றனர் அதனால் தாங்கள் வைத்துள்ள நெல் மூட்டைகளை மண்டி வைத்துள்ள நெல் வியாபாரிகளிடம் 250 ரூபாய் என குறைந்த விலைக்கு நெல்மணிகளை விற்பனை செய்து நஷ்டமடைந்து வருகின்றார்கள். அரசு நேரடி கொள்முதல் மையத்தின் மூலமாக கிராம நிர்வாக அலுவலரால் அளிக்கப்பட்ட கூப்பன்களை சீனியாரிட்டி படி நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் திமுகவினரின் அரட்டல் உருட்டல்களுக்கு அச்சப்பட்டு அரசு அலுவலர் மாலதி என்பவர் தனியார் ஏஜென்டுகள் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த விவசாயிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்களின் நெல் மூட்டைகளுக்கு முன்னுரிமை அளித்து கொள்முதல் செய்வதாக பல விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மூட்டை ஒன்றுக்கு சுமார் 60 ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு நெல் அவர்களின் மூட்டைகளை மட்டும் கொள்முதல் செய்கின்றார்கள் காமராஜபுரம் அரசு நேரடி கொள்முதல் மையத்தில் நமது செய்தியாளர் களத்தில் இறங்கி ஆய்வு செய்த போது அங்கு நெல் மூட்டைகளை ஏற்றி வந்த அனைத்து வாகனங்களும் திமுகவினரின் வாகனங்களாக இருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று விவசாய மக்களிடம் என்னவென்று கேட்டபோது, திமுகவினரின் அராஜக செயலால் எங்கள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள் கண்டுகொள்ளவில்லை. குறுவை சாகுபடி செய்து சுமார் மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கூப்பன் வைத்துள்ள எங்களுக்கு எங்களுக்கு சீனியாரிட்டி படி முன்னுரிமை அளிக்காததால் குடும்பச்சூழல் காரணமாக நாங்கள் தனியாரிடம் மிக குறைந்த விலைக்கு நெல் மூட்டைகளை விற்பனை செய்து நஷ்டமடைந்து விவசாயத் தொழிலை விட்டே விலகும் அவலமும் ஏற்படுகிறது என வேதனையுடன் கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended