• முகப்பு
  • aanmegam
  • திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழாவின் நிறைவாக இன்றிரவு தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் தைப்பூசத்திருவிழாவின் நிறைவாக இன்றிரவு தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 12, 2023, 6:25:56 PM

கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில், 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும் இங்கு சாரநாதப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்ச லட்சுமிகளுடன் சேவை சாதிக்கிறார், காவிரி நதி மூவாயிரம் தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுக, தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போல பஞ்ச லட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வேண்டும் என மூன்று வரங்கள் பெற்றதாக வரலாறு எனவே 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில் தைப்பூச திருவிழாவின் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பிரகார உலா நடைபெற்று 6ஆம் நாளான ஜனவரி 3ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை திருக்கல்யாண வைபவமும், 9ஆம் நாளான ஜனவரி 5ம் தேதி ஞாயிறுக்கிழமை காலை தேரோட்டமும் இரவு தீர்த்தவாரியும் இனிதே நடைபெற்றதை அடுத்து, தைப்பூச விழாவின் நிறைவாக, இன்றிரவு, கோயிலின் சாராபுஷ்கரணியில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தெப்பத்தில் பட்டு வஸ்திரங்கள், பொன்னகைகள் அணித்தும், மலர் மாலைகள் சூட்டியும், பஞ்ச லட்சுமிகளுடன் சாராநாதப்பெருமாள் நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்களுடன் எழுந்தருள, வான வேடிக்கைகளுடன் புஷ்கரணியை மும்முறை வலம் வர தைப்பூச தெப்போற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தெப்பத்தில் தாயார்களுடன் உலா வந்த பெருமாளை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் மாவட்ட செய்தியாளர் ரமேஷ்

VIDEOS

RELATED NEWS

Recommended