புகழ் பெற்ற அரியா கவுண்டம்பட்டி 63 ஆம் ஆண்டு இளையோர் சடுகுடு கபடி போட்டி

முத்தையா

UPDATED: May 12, 2023, 6:07:18 AM

நாமக்கல் மே 12 , ஆசிய அளவில் கடந்த 62 ஆண்டுகள் தொடர்ந்து கபடி போட்டிகளை நடத்தி சாதனை படைத்துள்ள நாமக்கல் மாவட்டம் அரியாக்கவுண்டன்பட்டி இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பில்  இந்த 63 ஆம் ஆண்டு கபடி போட்டி இன்று 11.05.2023 நடத்தப்பட்டது.

இதை அறிந்த சேலம் சரக காவல்துறை தலைவர் (டி.ஐ.ஜி) எஸ். ராஜேஸ்வரி இன்று மாலை 6.00 மணிக்கு அரியாக்கவுண்டன்பட்டி கிராமத்திற்கு நேரில் வந்து கபடி விளையாடிக் கொண்டிருந்த காவல்துறை மற்றும் இதர கபடி வீரர்களை பாராட்டி வாழ்த்தி விட்டு சென்றார் 

அப்போது விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கு உள்ள வேலை வாய்ப்பு மற்றும் இதர வாய்ப்புகள் குறித்து ஊக்கமளித்து பேசினார்.

சேலம் சரக காவல்துறை தலைவர் (டி.ஐ.ஜி) எஸ். ராஜேஸ்வரி அவருடன் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உள்ளிட்ட காவல்துறையினர் இருந்தனர்.

அவர்களை முன்னதாக நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம் , நாமகிரிப்பேட்டை , அரியாகவுண்டன்பட்டி இளையவர் சடுகுடு கிளப் அறக்கட்டளை சார்பாக அதன் தலைவர் ஏ .கே.பி.மணி, செயலாளர் என். அருள், பொருளாளர் பி. நடேசன் உள்ளிட்ட இளையோர் சடுகுடு கிளப் நிர்வாகிகள் வரவேற்றனர்.

போட்டிகள் ஏ .பி .சி .டி என்று நான்கு குழுக்களான அணிகளாக பிரிக்கப்பட்டிருந்தது அந்த 4 அணிகளுக்குள்ளும் 4 அணிகள் விளையாடி தேர்வு பெற்று அதில் வந்த 4 அணிகளில் வென்ற 2 அணிகளுக்கான இறுதி போட்டியில் வென்று 1,,2,,3,4,அணிகள் என்று வரிசையாக வெற்றி பெற்றனர்.

இதில் சென்னை சிட்டி போலீஸ் அணி, இன்கம் டேக்ஸ், ஜி .கே .சி வல்ல குட்டப்பட்டி, கன்னியாகுமரி ஏ .எம் கே .சி ,.கோபி உபி பிரதர்ஸ்,சி.பி .ஆர்.மதுரை ,கரட்டூர் ஸ்போர்ட்ஸ் கிளப் ,துரைசிங்கம், கட்டக்குடி ஸ்போர்ட்ஸ், அன்பு தம்பி, ஜி. எல். ஸ்போர்ட்ஸ், மதுரை போலீஸ், வானம்பாடி போத்தனூர், அன்னை தமிழ் திருச்செங்கோடு, லக்கி ஸ்டார் தம்மம்பட்டி, ஆகிய 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் 

செமி பைனல் கபடி போட்டியில் அணிகலும் பைனல் போட்டியில் அதாவது இறுதி ஆட்டத்தில் புகழ் பெற்ற அரியா கவுண்டம்பட்டி 63 ஆம் ஆண்டு இளையோர் சடுகுடு கபடி போட்டியில் இன்கம் டேக்ஸ் அணி 11 க்கு 22 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் வென்றது.

இரண்டாவது இடத்தில் யு .பி .பிரதர்ஸ் அணியும் , மூன்றாம் இடத்தில் சென்னை Almost போலீஸ் அணியும், நான்காவது இடத்தில் ஈரோடு அணியும் வெற்றி பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பையும் பதக்கங்களும்,ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

63 ஆம் ஆண்டு இளையோர் சடுகுடு கபடி போட்டியானது  12 .05.2023 அதிகாலை 3.00 வரை நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended