• முகப்பு
  • aanmegam
  • சிவபெருமான் தங்கிய கிராமத்தில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்.

சிவபெருமான் தங்கிய கிராமத்தில் உள்ள சோழர் காலத்தில் கட்டப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சிதம்பரம் அருகே அமைந்துள்ளது நக்ரவந்தன்குடி கிராமத்தில் தில்லை நடராஜர் ஒரு நாள் தங்கி இருந்ததாக ஐதீகம். இந்த கிராமத்தில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட திதிரௌபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது . இந்த திருக்கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக மகா கணபதி ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி பிரவேச பலி, என நான்கு கால யாகசாலை பூஜைகள் ஹோமங்கள் முடிந்தபின்பு சிவாச்சாரியர்கள் யாகம் செய்த கலசங்களை மேளதாளம் முழங்க தலையில் சுமந்தபடி நடனமாடிக் கொண்டு கோபுர உச்சியில் புதிப்பித்து வைக்கப்பட்ட கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். மேலும் கோவில் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், தட்சிணாமூர்த்தி, காலபைரவர், ஆஞ்சநேயர், நவகிரகம், ஆகிய பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்பு அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் விமானம் கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்.

VIDEOS

RELATED NEWS

Recommended