• முகப்பு
  • அரசியல்
  • திமுக அதிமுக இரு கட்சிகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படுவதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு

திமுக அதிமுக இரு கட்சிகளும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் செயல்படுவதால் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பு

JK 

UPDATED: Mar 28, 2024, 10:48:25 AM

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் மற்றும் போய நாயக்கர் இளைஞர் பேரவையின் சார்பில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் நடைபெற்றது.  

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

கூட்டத்தில் போயர் நல வாரியம் அமைக்க வேண்டும், கல் உடைக்கும் தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி போயர் சமுதாய மக்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

கல்வி வேலை வாய்ப்பு அரசு கட்டுமான பணிகளுக்கு போயர் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அதேபோல் அரசு வேலை சட்டமன்ற, பாராளுமன்ற, உறுப்பினர் பதவிகளுக்கு அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கோரிக்கைள் நிறைவேற்றப்பட்டது.

Also Watch : கூட்டணி வைத்திருந்தால்தான் கேட்ட சின்னம் கிடைக்கும் - சீமான்

தொடர்ந்து உழைக்கும் மக்கள் விடுதலை கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :

தமிழகத்தில் 50லட்சத்திற்கும் மேற்பட்ட போயஸ் சமுதாய மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சுதந்திரமடைந்து 77 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கான கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் இவை அனைத்தும் பின்தங்கிய நிலையிலேயே தான் இருக்கிறது

Also Watch : திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக இருந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் வெளியேற்றிய அவலம்

அதிலும் தமிழகத்தில் எங்களின் ஓட்டுக்கள் பெறவே அதிமுக திமுக இரு கட்சிகள் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தேர்தல் அறிக்கையில் மட்டும் அறிவித்துவிட்டு ஆட்சி அமைத்தவுடன் எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல் சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசுவதில்லை எனவே இந்த முறை நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended