• முகப்பு
  • district
  • தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது.

தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. லஞ்சம், ஊழல் அதிகரித்து விட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு, பாஜக மாவட்டத் தலைவர் கே.எஸ்.பாபு தலைமை வகித்தார். அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பாஜக மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ் செய்தியாளர்களுக்கு அளித்து பேட்டி தமிழகத்தில் சட்டம் - ஒழுங்குமோசமாக இருக்கிறது. காவல் நிலையத்தில் தொடரும் லாக்கப் மரணங்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வை இன்றி தொடர்ந்து நடக்கும் குழப்பமான நடவடிக்கைகள், தொழில் வணிகத்துறையில் தொடரும் எதிர்வினைகள், விவசாயிகளை கைவிட்டது உள்ளிட்ட ஆளும் திமுகவின் நடவடிக்கைகள் பெரும் துன்பத்தை தமிழக மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெறும் அறிக்கை அரசியலை மட்டும் நடத்துகின்றனர். பட்டியல் இனத்தின் பாதுகாவலர் என்று சொல்லிக்கொள்ளும் திமுக, பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை, நாட்டின் குடியரசுத் தலைவராக பாஜக முன்னிறுத்தும்போது வரவேற்று இருக்க வேண்டாமா? திமுகவுக்கு உண்மையான கொள்கைப் பிடிப்பு கிடையாது. எந்த ஒரு செயலுக்கும் லாப நோக்கம் இல்லாமல், திமுகவால் செயல்பட முடியாது மக்கள் படும் துன்பத்தை மறந்து விட்ட திமுக ஆட்சியைக் கண்டித்து 800க்கும் மேற்பட்ட பாஜகவினர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட பார்வையாளர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் வாசன், ருத்ரகுமார் ,பார்த்தசாரதி ,ஓம் சக்தி பெருமாள், செல்வமணி ,செந்தில்குமார் , அனந்தபாபு, காஞ்சி நகர மேற்கு தலைவர் ஜீவானந்தம் உள்ளிட்ட திரளான நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். பேட்டி - சுமதி வெங்கடேஷ் பாஜக மாநில செயலாளர். காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended