• முகப்பு
  • district
  • தேனி மாவட்டம் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தூய்மைப்பணி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

தேனி மாவட்டம் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தூய்மைப்பணி மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் , தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையம் , பழனிசெட்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் இன்று ( 11.06.2022 ) மாவட்ட ஆட்சித்தலைவர் க.வி.முரளிதரன் , இ.ஆ.ப. , அவர்கள் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு பணிகளை தொடங்கி வைத்து , மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணிகளை பார்வையிட்டார் . தேனி - அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட கர்னல் ஜான் பென்னிகுயிக் பேருந்து நிலையத்தில் தூய்மைக்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளுக்கு வழங்கியும் , அதனைதொடர்ந்து , பழனிசெட்டிபட்டி பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் குப்பையில்லா நகரம் உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து , துவக்கி வைத்தார். பொதுமக்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி , மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப்பணிகளை பார்வையிட்டு தெரிவித்ததாவது , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆலோசனையின்படி , 2022-2023 ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையில் சுத்தமான , பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் பொருட்டு நகரங்களில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் , ஒவ்வொரு மாதமும் இரண்டாம் மற்றும் நான்காம் சனிக்கிழமைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் ( Cleanliness drive ) நடத்த " நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ( Peoples Movement for Clean Cities ) " தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது . அதன்படி , தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.06.2022 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப்பகுதிகளில் செயல்படுத்திட தொடங்கி வைத்தார்கள் . அதனடிப்படையில் , தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிப்பகுதிகளில் " நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் தூய்மைப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது . அதனைத்தொடர்ந்து , இன்றைய தினம் தேனி மாவட்டத்திலுள்ள 6 தகராட்சிகள் மற்றும் 22 பேரூராட்சிப்பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் இயக்கத்தின் கீழ் கீழ் மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை பற்றி வலியுறுத்தும் விதமாக தூய்மை மற்றும் சுத்தம் தொடர்பான துண்டு பிரச்சாரங்கள் விநியோகிக்கவும் . மஞ்சப்பையின் அவசியத்தை உணர்த்த மஞ்சப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . மேலும் , கடை உரிமையாளர்கள் , வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இத்தூய்மைப் பணியில் முழுமையாக பங்கெடுத்திட வேண்டும் . ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகளை விளக்கி , மீண்டும் மஞ்சப்பை உபயோகப்படுத்தி , சுற்றுப்புறப்பகுதிகளை சுகாதாரமாக வைத்து நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் தூய்மைப்பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என தெரிவித்தார் . இந்நிகழ்வுகளின் போது , தேனி - அல்லிநகரம் நகராட்சி நகர் மன்றத்தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் , துணைத்தலைவர் மா.செல்வம் , பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மன்றத்தலைவர் மிதுன்சக்கரவர்த்தி , நகராட்சி ஆணையாளர் அ.வீரமுத்துக்குமார் . செயல் அலுவலர் சின்னசாமி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர் . வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் , தேனி. தேனி மாவட்ட செய்தியாளர் MP . ஜீவா.

VIDEOS

RELATED NEWS

Recommended