இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரப் பயண ஆலோசனை கூட்டம் வேளுக்குடியில் நடைபெற்றது.

இளவரசன்

UPDATED: May 7, 2023, 8:59:59 AM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிஜேபி ஆட்சி அகற்றுவோம் நாட்டையும் மக்களையும் காப்போம் மாற்றத்தை நோக்கி நாடு தழுவிய நடை பயண பிரச்சார பயணம் 2023 மே 5 முதல் 10ஆம் தேதி வரை 100 குழுக்களாகவும், 5000 மையங்களில், 5 லட்சம் மக்களை சந்தித்து கிராமங்கள், நகரங்கள் தோறும் நடைப்பயண பரப்புரை பேரியக்கம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மன்னார்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 8 9 10 ஆகிய தேதிகளில் பூதமங்கலம் வேளுக்குடி பாரதி மூலங்குடி சித்தன்னக்குடி ஓகைப்பேரையூர் கீழமணலி ஆகிய பகுதிகளில் பிரச்சார நடைபெற இருக்கிறது, இதற்கான ஆலோசனைக் கூட்டம் வேளுக்குடியில் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் துரை அருள்ராஜன் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள் இளரா ரமேஷ் குமார் கிளைச் செயலாளர் என பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended