• முகப்பு
  • chennai
  • சரியான முறையில் ஹெல் மெட் அணியவில்லை என்றாலும், ரூ.2000 அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

சரியான முறையில் ஹெல் மெட் அணியவில்லை என்றாலும், ரூ.2000 அபராதம் விதிக்கப் படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது..

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

போக்கு வரத்து விதிகளை மீறுவதைக் கட்டுப் படுத்தவும், சாலை விபத்து இறப்புகளைக்குறைக்கவும், 1998 மோட்டார் வாகனச்சட்டத்தின் இந்த புதிய விதிமுறை சேர்க்கப் பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் ஹெல் மெட் அணிந்திருந்தாலும் இவை விதிக்கப் படலாம் என்று கூறப் படுகிறது பின்வரும் சூழ்நிலைகளில் ரூபாய் ₹ 2,000 வரை அபராதம் விதிக்கப் படலாம். நீங்கள் ஹெல் மெட் அணிந்திருந்தாலும், மோட்டார்சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும்போது ஹெல் மெட்டின் ஸ்ட்ரைப் அவிழ்க்கப் பட்டிருந்தால், ₹ 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். உங்கள் ஹெல்மெட்டுக்கு BSI (Bureau of Indian Standards) சான்றிதழ் இல்லை என்றால், உங்களிடம் ₹ 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப் படலாம். சிவப்புசிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற பிறபோக்குவரத்து விதிகளை மீறினால், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூபாய் 2,000 ₹ அபராதம் விதிக்கப் படும். வாகனத்தில் அதிகபாரம் ஏற்றினால், ரூபாய் 20,000 அபராதம் செலுத்தவேண்டி இருக்கும்.. இருசக்கர வாகன ஹெல்மட்களின் தரத்தையும் மேம்படுத்த முடியும், மேலும் சாலை பாதுகாப்பு சூழ்நிலையை மேம்படுத்தும், மேலும் இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்க இது மேலும் உதவியாக இருக்கும் மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது..

VIDEOS

RELATED NEWS

Recommended