• முகப்பு
  • அரசியல்
  • திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின், நீர் ஆதாரமாக விளங்கும், மறவன்பத்து குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகளை சீரமைத்துத்தர, மாவட்ட நிர்வாகத்துக்கு, பாஜக கோரிக்கை! 

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின், நீர் ஆதாரமாக விளங்கும், மறவன்பத்து குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகளை சீரமைத்துத்தர, மாவட்ட நிர்வாகத்துக்கு, பாஜக கோரிக்கை! 

மேலப்பாளையம் ஹஸன்

UPDATED: May 18, 2023, 9:04:42 AM

திருநெல்வேலி புறநகர் மாவட்டம், ராதாபுரம் வட்டத்தின், பல்வேறு பகுதிகளுக்கும் மிக முக்கியமான நீர் ஆதாரமாக விளங்கி வருவது "மறவன்பத்து"  குளம் ஆகும்.

இந்த  குளத்தின், மதகு மற்றும் மறுகால் பகுதிகள்,  அதிக அளவில் சேதமடைந்து உள்ளன. அதன் காரணமாக, பருவமழைக் காலங்களில், மழை நீரை சேகரிக்க முடியாத, இக்கட்டான  சூழ்நிலை, உருவாகி உள்ளது.

இது குறித்து "பாரதீய ஜனதா கட்சி"யின், "ராதாபுரம்  தெற்கு ஒன்றிய செயலாளர்" ராதை காமராஜ், நேற்று (மே.17) வடக்கன்குளம், பொதுப்பணித் துறையின், நீர்வள ஆதாரத்துறை "உதவி பொறியாளர்"  ஜெயலட்சுமியிடம், "கோரிக்கை மனு" ஒன்றை, நேரில் அளித்தார்.

அந்த மனுவில், அவர் குறிப்பிட்டிருப்பதாவது:-

"மறவன்பத்து குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகள் உடைந்து, அதிக அளவில் சேதம் அடைந்து  இருக்கின்றன. அதன் காரணமாக,  பருவ மழைக் காலங்களில், இந்த  குளத்தில், மழைநீரை சேமிக்க முடியாத அளவுக்கு, இக்கட்டான  சூழ்நிலை ஏற்ப்பக்டுள்ளது.

இதனால் போதிய மழை பெய்தும் கூட, இந்த குளமும்,  இதனுடன் இணைந்த மற்ற குளங்களும், நீர் வற்றியதாக, விரைவில் வறண்டு விடுகின்றன. இவ்வாறு, நீர் ஆதார குளங்கள் நீரின்றி வறண்டு  விடுவதால், விவசாயிகள் மட்டுமல்லாது, பொது மக்களும், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி, வருகின்றனர்.

இவற்றை கருத்திற்கொண்டு,  "மறவன் பத்து" குளத்தின் மதகு மற்றும் மறுகால் பகுதிகளை, போர்க்கால ஞ
அடிப்படையில், உடனடியாக சீரமைக்க வேண்டும்!"- இவ்வாறு,   அந்த மனுவில், பாரதீய ஜனதா கட்சியின், ராதாபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் குறிப்பிட்டுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended