• முகப்பு
  • pondichery
  • அக்னிபாத் திட்டம் என்பது பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சேர்ந்து செய்த சதி திட்டம்.

அக்னிபாத் திட்டம் என்பது பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சேர்ந்து செய்த சதி திட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அக்னிபாத் திட்டம் என்பது பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் சேர்ந்து செய்த சதி திட்டம் என குற்றம்சாட்டிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உடனடியாக நிபந்தனையின்றி அந்த திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் எனவும், அப்படி இல்லாத பட்சத்தில் வட மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கலவரங்கள் தென் மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி... கடந்த மூன்று ஆண்டுகளாக ராணுவத்தில் புதிய ஆள் சேர்க்கை இல்லாமல் ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் ராணுவத்தில் பணிப்புரிய ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை நியமனம் செய்ய மத்திய அரசு அக்னி பாத் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளதை ஏற்கமுடியாது என்றார். நரேந்திர மோடி கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தால் வட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது, மோடியின் திட்டத்தால் நாட்டி மிகப்பெரிய கலவரம் மற்றும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அக்னிபாத் திட்டம் என்பது பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கம் சேர்ந்து செய்த சதி திட்டம் என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை வலுப்படுத்தவே இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நிபந்தனைகள் இன்றி மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் இல்லை என்றால் வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கலவரம் தற்போது தென் மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் பேசிய அவர் புதுச்சேரியில் உள்ள என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது அதனால் தான் மத்திய அரசு புதுச்சேரியில் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறிய அவர், கடந்த காங்கிரஸ் ஆட்சியை விமர்சனம் செய்த ரங்கசாமி தற்போது ஏன் முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடியவில்லை என்று மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இது வரை சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் புதுச்சேரியில் கொண்டு வந்த திட்டங்களை பார்த்து அண்டை மாநிலத்தில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர்கள் தற்போது குடும்ப அட்டைகளை ரத்து செய்து விட்டு பக்கத்து மாநிலங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். *பேட்டி; நாராயணசாமி புதுச்சேரி முன்னாள், முதலமைச்சர்*

VIDEOS

RELATED NEWS

Recommended