• முகப்பு
  • கல்வி
  • காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் வட்டார அலுவலகத்தில் நடைபெறும் முறைகேட்டால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம்.

காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு பாடநூல் வட்டார அலுவலகத்தில் நடைபெறும் முறைகேட்டால் மாணவ மாணவிகளின் கல்வி தரம் பாதிக்கும் அபாயம்.

லட்சுமி காந்த்

UPDATED: May 17, 2023, 2:07:34 PM

காஞ்சிபுரம் மாவட்டம் சிறு காவேரிப்பாக்கம் பகுதியில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்பட்டு வருகின்றது. வட்டார அலுவலர் காயத்ரி அவர்கள் இந்த அலுவலகத்தின் பொறுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 800 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கும் , 400 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் இந்த கிடங்குகளில் இருந்து தான் புத்தகங்கள் அனுப்பப்படும்.

இந்த கல்வி ஆண்டுக்கான 2023/2024 தமிழ்நாடு பாடநூல் புத்தகங்கள் அனைத்தும் கரூர் (டிஎன்பிஎல்) அச்சகத்தில் அச்சிடப்பட்டு லாரிகள் மூலம் கடந்த மாதம் குடோனுக்கு வந்து இறக்கப்பட்டது.

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் தமிழ் மொழியில் 1 ம் வகுப்பு முதல் 10 ம் வகுப்பு வரை ஒரு பருவம் கொண்ட புத்தகங்கள் 24,000 ஆயிரம் , ஆங்கிலப் பாட நூல்கள் 18,500 , கணக்கு பாட நூல்கள் 19000 , சோசியல் சயின்ஸ் நூல்கள் 20,000 , அறிவியல் நூல்கள் 19000 வந்துள்ளது.

ஒரு பண்டலில் 15 முதல் 25 புத்தகங்கள் என வைக்கப்பட்டு சுமார் ஒன்பதே முக்கால் எடை கொண்ட பார்சலாக கணக்கிடப்பட்டு பண்டல்கள் அனுப்பப்படும்.

அதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மூன்று பருவத்திற்குண்டான பாட நூல்களும், ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பருவத்திற்குண்டான பாட புத்தகங்களும் கிடங்கிற்கு வந்துள்ளது.

கோடை காலம் முடிந்து பள்ளி திறந்த மறுநாள் தான் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தேவையான பாடநூல் புத்தகங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கிடங்கியில் வாங்கி வைப்பார்கள். இவர்கள் இண்டன் போட்டதை விட சுமார் 5 சதவீத பண்டல்கள் கூடுதலாகவே வரும்.

பாடநூல்களை வாங்க வருகின்ற அனைத்து தனியார் பள்ளிகளும் இன்வாய்ஸ் எனப்படும் பில் கொண்டு வந்தால் மட்டும் தான் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பாடநூல் புத்தகங்களை வாகனத்தில் ஏற்றுவார்கள்.

அனைத்து பாடநூல்களும் இந்த கிடங்கில் தான் வைத்து பராமரிக்க வேண்டும். வெளி இடங்களில் எங்கும் வைக்கக்கூடாது.பள்ளிகளுக்கு அனுப்பப்படும் அத்தனை பாடநூல்களும் இன்வாய்ஸ் போட்டு தான் அனுப்ப வேண்டும் என்ற விதி உள்ளது.

அதேபோல் காலாவதியான பாட நூல்களை தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனமான TNPL க்கு அனுப்பிவிடுவார்கள். அதை அவர்கள் சுழற்சி முறையில் கூழாக்கி மீண்டும் காகித உற்பத்தி செய்து பிரின்டிங் செய்வார்கள்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் பகுதியில் லியோ புக் என்ற புத்தககடையின் உரிமையாளர் மகேஷ் என்பவர் இந்த கிடங்கியில் உள்ள வட்டார பெண் அலுவலரிடம் நட்பு பாராட்டி "இன்வாய்ஸ் போடாமலேயே" வித்தவுட் பில்லில் புத்தகங்களை தன் கடைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. 

தன் கடையின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கிடங்கில் உள்ளவர்களிடம் வித்தவுட் பில்லில் புத்தகத்தை வாங்கி விற்பனை செய்து அந்தப் பணத்தை நேரடியாக வட்டார அலுவலரிடம் அளிக்கபடுவதால் அந்த பணம் கணக்கில் வரவு வைக்காமல் முறைகேடு செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.

அதிகாரிகள் தணிக்கை செய்ய வரும்போது ஏற்கனவே காலாவதியான புத்தகங்களை இந்த கல்வியாண்டின் புத்தகப் பண்டல்களுக்கு கீழே வைத்து பண்டல்களை கணக்குக் காண்பித்து அனைத்து பண்டல்களும் சரியாக உள்ளது என கூறி சமாளித்து விடுவார்கள்.

அது மட்டுமல்லாமல் இந்த கல்வி ஆண்டுக்கான புதிய பாடநூல்களை லியோ புத்தக கடையின் உரிமையாளர் மகேஸ் இடம் விற்பனை செய்துவிட்டு , 

சிலபஸ் மாறாமல் இருந்தால் காலாவதியான அந்தப் புத்தகங்களின் முதல் பக்கத்தை மட்டும் கிழித்து விட்டு புதிய பாடநூல்கள் அனுப்பும்போது இதையும் சேர்த்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து விடுவார்கள் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டும் கூறப்படுகிறது. 

சிலபஸ் மாறாமல் இருந்தால் மட்டுமே மாணவ மாணவிகளுக்கு புதிய புத்தகம் எது பழைய புத்தகம் எது என தெரியாமலேயே பள்ளிகளில் இருந்து வாங்கி செல்வார்கள். 

அதேசமயம் சிலபஸ் மாறிவிட்டிருந்தால் காலாவதியான புத்தகமும் இந்த கல்வி ஆண்டுக்கான புத்தகங்களும் மாணவர்கள் கையில் கிடைக்கும் போது கல்வியின் தரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. நூற்றில் 60 சதவீதம் மாணவ மாணவிகள் தான் சிலபஸ் மாறிவிட்டதை கண்டறிவார்கள்.

பெரும்பாலும் சிலபஸ் மாறாது என கூறப்படுகிறது. அப்படி சிலபஸ் மாறிய காலாவதியான புத்தகத்தை படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளின் கதி என்ன என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

அதேபோல் காலாவதியான புத்தக பண்டல்கள் அனைத்தும் கணக்கிட்டு, பிரிண்டிங் பிரஸ்லிருந்து எவ்வளவு டன் வந்தது, எவ்வளவு விற்பனை செய்யப்பட்டது , எவ்வளவு மீதம் உள்ளது , என்பதை கணக்கிட்டு காலாவதியான புத்தகத்தை லாரிகள் மூலம் டி என் பி எல் க்கு அனுப்புவார்கள். 

ஒவ்வொரு முறையும் காலாவதியான புத்தக பண்டல்களை திருப்பி அனுப்பும்போது அதில் குறைந்தபட்சம் ஆயிரம் கிலோ முதல் அதிகபட்சம் இரண்டாயிரம் கிலோ வரை எடை குறைவு ஏற்படும் என்றும் புத்தகப் பண்டல்களை கரையான் பிடித்து விட்டது, செல் அரித்துவிட்டது, சணல் கயிறு நசிந்து விட்டது போன்ற பொய்யான காரணங்களை கூறி எடை குறைவிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.

நமது செய்தியாளர் களத்தில் இறங்கி கள ஆய்வு செய்தபோது, வட்டார அலுவலரின் அலுவலகத்தின் அருகே உள்ள எலக்ட்ரிகல் ரூமில் சுமார் நூறு பண்டல்கள் வரை 2021 2022 ஆம் ஆண்டுக்கான புதிய புத்தகங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்து போனோம். இதைப் பற்றி வட்டார அலுவலரிடம் கேட்டபோது, கிடங்கில் வைக்க இடமில்லை என பொய் பேசினார்கள். கிடங்கில் சென்று பார்த்தபோது சுமார் 50,000 பண்டல்கள் வரை வைக்க காலி இடம் இருந்தது.

2021 / 2022 ஆம் ஆண்டுக்கான காலாவதியான புத்தகங்களை கடந்த வருடம் 9ம் மாதம் டிஎன்பிஎல் அனுப்பி உள்ளார்கள். அதன் பிறகு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயிரம் கிலோ எடை கொண்ட சிலபஸ் மாறாத பழைய புத்தகங்களை லியோ புத்தக கடைக்கு விற்று பணத்தை சம்பாதித்து உள்ளார்கள். 

இதைப் பற்றி கிடங்கில் 20 வருட காலமாக பணிபுரிந்த குமார் என்பவர் கூறும் போது, மேற்கண்ட அனைத்து முறைகேடுகளும் இந்த இரண்டு வருடமாக தான் நடக்கின்றது, இதற்கு ஒரு முடிவு கட்டுங்கள் என வேண்டிக் கொண்டார்.

பேட்டி - குமார் 20 ஆண்டுகாலமாக பணி செய்யும் சுமை தொழிலாளி

VIDEOS

RELATED NEWS

Recommended