• முகப்பு
  • district
  • பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது

பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 22 வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே பாபநாசத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது ஒன்றிய மாநாடு நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சாமு. தர்மராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஒன்றிய மாநாட்டில் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் பரமசிவம் கொடியினை ஏற்றிவைத்தார். இதில் ஒன்றிய பொருளாளர் சேகர் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கனகராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கண்ணகி, மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சந்திரா, கிளை செயலாளர்கள் ஜெகநாதன், இலங்கேசன், ராஜ், ரவி, ராஜேந்திரன், மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் இம்மாநாட்டில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வருகிற 26.06.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பாபநாசத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 24-ஆவது மாநாட்டில் குடும்பத்தோடு அனைவரும் கலந்து கொள்வது எனவும், கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும். அரசு புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு ஆகிய இடங்களில் குடியிருப்பவர்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். அரயபுரம், தட்டுமால்படுகை விவசாயிகளுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பட்டா வழங்க வேண்டும். பண்டாரவாடை இனாம் கிராமத்தில் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான இடத்தில் குடியிருக்கும் விவசாயிகளுக்கு நில பட்டா வழங்க வேண்டும். அனைத்து கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும். 100-நாள் வேலைத் திட்டத்தில் முறையாக வேலை வழங்கி கூலியை வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இம்மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பாபநாசம் புதிய ஒன்றிய செயலாளராக பொன். சேகர், ஒன்றிய துணைச் செயலாளராக கனகராஜ், ஒன்றிய பொருளாளராக சாமு. தர்மராஜன் உள்ளிட்ட 13 புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended