மணப்பாறையில் பேக்கரி குடோனில் பயங்கர தீ விபத்து

மகேந்திரன்

UPDATED: May 11, 2023, 1:12:20 PM

மணப்பாறை மதுரை சாலையில் தனியார் பேக்கரி உள்ளது. இதன் அருகே பேக்கரிக்கு தேவையான கேக் உள்ளிட்ட  உள்ளிட்டவைகள் தயாரிப்பதற்கான குடோன் செயல்பட்டு வருகிறது.

அந்த குடோனில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிலிண்டரில் இருந்து கியாஸ் அடுப்பிற்கு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.

இதனால் குடோனில் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்து சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவவிடாமல் தடுத்து அணைத்தனர்.

எனினும் இந்த விபத்தில் பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. மருத்துவமனை, குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடந்த இந்த தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended