• முகப்பு
  • அரசியல்
  • தலித் கிறிஸ்தவர்களை புறக்கணிக்கும் கத்தோலிக்க அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் நல கட்சியினர் கோரிக்கை

தலித் கிறிஸ்தவர்களை புறக்கணிக்கும் கத்தோலிக்க அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக மக்கள் நல கட்சியினர் கோரிக்கை

JK 

UPDATED: May 29, 2023, 12:03:15 PM

தேசிய தலித் கிறிஸ்தவ பேரவையின் தென் மண்டல செயலாளர் வின்சென்ட் மற்றும் தமிழக மக்கள் நலக் கட்சியின் மாநில பொருளாளர் தாஸ் பிரகாஷ் ஆகியோர் ஒருங்கிணைந்து இன்று 29.5.2023 திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டை பாளையம் கிராமத்தில் உள்ள புனித மகதலேனா மரியாள் பங்கு ஆலயத்தில் தலித் கிறிஸ்தவர்கள் அதாவது கிறிஸ்தவ அருந்ததியர் வண்ணான், பறையர், ஆகிய பிரிவினருக்கு எதிராக தீண்டாமை பாகுபாடு காட்டும் நிலை நீண்ட காலமாக ஏற்பட்டு உள்ளது.

கும்பகோணம் கத்தோலிக்க மறைமாவட்டத்திற்கு உட்பட்ட கோட்டப்பாளையம் பங்குத்தந்தை அகஸ்டின் மற்றும் அங்குள்ள ஆதிக்க சாதி கிறிஸ்தவர்கள் இந்த எதர்ச்சி அதிகாரப் போக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக கோவில் திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவரிடம் வரி வசூல் செய்யாமலும், பங்கு பேரவையில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இடம் தர வேண்டும் என்ற காரணத்தால் பங்கு பேரவை அமைக்காமல்,

ஆலயத்தில் நடைபெறும் திருவிழா நேரங்களில் தலித் தெருவுக்கு தேர் கொண்டு செல்லாமலும், சுருவம் தூக்கி வைக்க அனுமதிக்காமலும் புறக்கணித்து வருகின்றனர்.

தலித் கிறிஸ்தவர்கள் இறந்து போனால் கூட சடலத்தை ஆலயத்தில் வைத்து பூசை செய்ய மறுத்து சாதிய தீண்டாமை பாகுபாடை மேற்கொண்டு வருகின்றனர். 

இதுகுறித்து பல்வேறு தமிழக முதல்வர், அரசு உயர் அதிகாரிகள், கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதிகளுக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த தீர்வும் வழங்கப்படவில்லை.

இது குறித்து தற்போது கத்தோலிக்க தலைமை பீடமான ரோமுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் உச்ச நீதிமன்றமும் அல்லது உயர் நீதிமன்றமும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழக மக்கள் நலக் கட்சியின் நிர்வாகிகள் எபினேசன், வேளாங்கண்ணி, ராஜ்நோபில், ஏசுதாஸ் ஆகிய உடன் இருந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended