• முகப்பு
  • குற்றம்
  • பண்ருட்டி அருகே அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் மீது வழக்குப்பதிவு.

பண்ருட்டி அருகே அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி பிரமுகர் மீது வழக்குப்பதிவு.

இடும்பன்

UPDATED: May 14, 2023, 7:17:19 PM

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப் பாடியில் நெடுஞ்சாலைத் துறையினரால் சேலம் - கடலூர் சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.

தொரப்பாடி குமரன் கோயில் தெருவை சேர்ந்த முருகன் மகன் மோகன் பாபு (வயது 32) தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர். இவரது நிலத்தை அரசு கையகப் படுத்திக்கொண்டு அதற்குண்டான தொகையை அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் போலீசாருடன் நெடுஞ்சாலை உதவி பொறியாளர் எழிலரசி தலைமையில் ஆக்கிர மிப்பை அகற்றினர்.

அங்கு வந்த மோகன்பாபு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி பணி செய்ய விடாமல் தடுத்து ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் நெடுஞ் சாலைத்துறை உதவி பொறியாளர் எழிலரசி புகார் செய்தார்.

அதன்பேரில் புதுப் பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவின் கீழ் மோகன்பாபு மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

VIDEOS

RELATED NEWS

Recommended