• முகப்பு
  • அரசியல்
  • தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து விஷ சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்

தமிழ்நாட்டில் கொலை கொள்ளைகள் அதிகரித்து விஷ சாராயம் பெருக்கெடுத்து ஓடுவதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும் பதவி விலக வேண்டும்

முத்தையா

UPDATED: May 29, 2023, 11:17:49 AM

தமிழகத்தில் தொடரும் ஊாழல் முறைகெடுகள், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் ஏற்படும் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி, போதை பொருட்கள் புழக்கம் உள்ளிட்ட சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க அரசை கண்டித்தும்,

இவைகளுக்கு முழுப்பொறுப்பு ஏற்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி 

நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நாமக்கல் உழவர் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு,

நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் தமிழக மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அதிமுக அமைப்புச் செயலாளர் பி. தங்கமணி தலைமை வகித்து இந்த கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை எழுப்ப அதிமுகவினர் அதை திரும்ப சொல்ல கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்,

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் கொலை கொள்ளை கள்ளச்சாராய கலாச்சாரம் போதை பொருள் அதிகரித்து விட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர் கரூர் மாவட்டம் முதலமைச்சர் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் டிஜிபி கட்டுப்பாட்டிலும் இல்லாமல் அது ஒரு தனி மாநிலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜி என்றும் அவர் ஒரு தனி முதலமைச்சராக செயல் படுகிறார் என்றும்,

இப்பொழுது அவர் வீட்டில் வருமானவரித்துறை ரைட் நடத்தியது குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார், சுவர் ஏறி குதித்து வந்ததாக கூறுகிறார்.

பெண் வருமான வரி அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் செந்தில் பாலாஜி ஆட்களால் தாக்கப்படுகிறார்கள் இதே நிலை எங்களுக்கும் ,எங்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்ட போது எங்கள் வீடுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சுவர்  ஏறி குதித்து தான் வந்தார்கள் எப்படி வந்தாலும் நீங்கள் உங்கள் வேலையை செய்து விட்டுப் போங்கள் எங்கள் மடியில் கனமில்லை வழியில் அதனால் எங்களுக்கு பயம் இல்லை நீங்கள் எந்த சோதனை செய்தாலும் நாங்கள் தயார் என்றோம்

நெஞ்சில் கனமில்லை எங்களுக்கு பயம் இல்லை எந்த குற்றமும் நாங்கள் செய்யவில்லை என்று வருமானவரித்துறை அதிகாரிகளை சோதனைக்கு இடையூறு இல்லாமல் நாங்கள் அதிமுக ஆட்சியில் இருக்கும் பொழுதே நடந்து கொண்டோம்.

ஆனால் இப்போது செந்தில் பாலாஜி வீட்டில் இந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்கு எதற்காக இவ்வளவு தூரம் பயப்படுகிறார் என்ற தெரியவில்லை எதற்காக பல்வேறு கதைகளை கட்டி விடுகிறார் என்றும் தெரியவில்லை.

இவர் நேர்மையாக இருப்பார் என்றால் எதற்கு இந்த கதைகளை எல்லாம் அவர் பேச வேண்டும் என்றும் கூறிய பி.தங்கமணி சட்ட ஒழுங்கு கெட்டு கொள்ளைகள் அதிகமாகி கள்ளச்சாராயம் அதிகரித்து போதை பொருட்கள் அதிகரித்து விஷசாராய சாவுகள் ஏற்பட்டு கொண்டு இருக்கும் திமுக அரசு,

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அவரும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனடியாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் இன்னும் பல்வேறு தகவல்கள் குறித்து முன்னாள் அமைச்சர் பி தங்கமணி பேசினார்.

பின்பு செய்தியாளர்களுக்கும் பி.தங்கமணி பேட்டி அளித்தார் 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வி .சரோஜா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி பாஸ்கர் தற்போதைய பரமத்தி சட்டமன்ற உறுப்பினர் சேகர்  நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஆர் சாரதா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

VIDEOS

RELATED NEWS

Recommended