• முகப்பு
  • district
  • தமிழ்நாடு விவசாய சங்கம் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.

தமிழ்நாடு விவசாய சங்கம் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் ஹச்.எம் மஹாலில் , தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமை சங்கத்தின் அமைப்பு கட்டமைப்புக்கான களப்பணி விளக்கத்திற்கும் ,பொறுப்பாளர்கள் அற்பணிப்பு பங்களிப்பு உறுதி ஏற்பு விழா. தலைமை ராஜேஷ் தென் கோவானூர், ஆரூர் மாவட்ட முன் கல பொறுப்பாளர் குமார், சிறப்புரையாற்றியவர் இராச பாலன் மாநிலத் தலைவர். தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட செயலாளர் , பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. விவசாய சங்கத்தின் நோக்கம் ஜாதி, மதம், கட்சி இதற்கு அப்பால் விவசாய நல சங்கத்தினர் யார் எந்த கட்சியில் இருந்தாலும், எந்த மதத்தில் இருந்தாலும் ,எந்த ஜாதியாக இருந்தாலும் , விவசாயத்தில் எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் ,ஆளும் கட்சிகாரரா இருந்தாலும் ,விவசாய சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்புகள் எதுவாக இருந்தாலும் விவசாய சங்கத்தின் ஒரு நபரிடம் தெரிவித்தால் போதும் தமிழகம் முழுவதும் உள்ள தலைவர்கள் , செயலாளர்கள் , பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி பிரச்சனையை தீர்த்து வைப்பார்கள். கட்டமைப்பு கூட்டம் தீர்மானம் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மொத்தம் ஆறு மாதத்தில் 29 மனுக்கள் ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டு உள்ளன , அதில் 1 கோரிக்கை மட்டும் நிறைவேற்றப்பட்டன . சிற்பத்திற்கு ரூபாய் 40 வாங்கியது மாத்திரம் வாங்க கூடாது என ஆட்சியர் அறிவித்தார் , அதை யாரும் கடைபிடிக்கவில்லை , மனுக்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை . ஒரு மாநில விவசாய சங்கம் வைக்கும் கோரிக்கையை நிறைவேற்றாத ஆட்சியர் ஒரு சாமானிய மக்களின் கோரிக்கையை எப்படி நிறைவேற்றுவார். வரும் ஜூன் மாதம் 100 மோட்டார் சைக்கிள் ஊர்தி பேரணி , திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்த உள்ளோம் , ஆட்சியர் இதுவரை என்ன செய்து உள்ளார் என்பதனை தெரிந்துகொள்ள பேரணி நடத்த உள்ளோம் என்று தெரிவித்தனர். இவ்விழாவில் திருவாரூர் மாவட்ட முன்கள பொறுப்பாளர் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். மன்னார்குடி செய்தியாளர் வீரமணி.

VIDEOS

RELATED NEWS

Recommended