• முகப்பு
  • குற்றம்
  • விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல்துறை கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா பணியிடை நீக்கம்.

விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல்துறை கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா பணியிடை நீக்கம்.

மேஷாக்

UPDATED: May 15, 2023, 2:06:21 PM

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் விஷ சாராயம் குடித்து பலியானார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் எக்கியார் குப்பத்தில் பதட்டம் நிலவிவருகிறது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எக்கியார் குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனையை தடுக்கக்கோரி மீனவ கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு, மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இருபுறமும் நீண்டவரிசையில் காத்து நின்றது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதல், கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, டி.ஐ.ஜி. பகலவன், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, திண்டிவனம் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். எக்கியார்குப்பம் பகுதியில் விஷ சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. விழுப்புரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயத்தை குடித்ததால் 10 பேர் இறந்துள்ளனர்.

அவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து இருப்பதாக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன் கூறினார்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 4 பேரை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

விஷ சாராயம் எங்கிருந்து வாங்கப்பட்டுள்ளது, மேலும் வேறு குற்றவாளிகள் தொடர்பில் உள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இந்நிலையில் விஷ சாராயம் அருந்தி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவரை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

 * கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். 

* கள்ளச்சாராய விற்பனையை கண்காணிக்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

* கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளேன். விற்பனை செய்தது யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 * பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தலா ரூ.50,000 வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீ நாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended