• முகப்பு
  • district
  • மணப்பாறையில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

மணப்பாறையில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை துவங்கியது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரதான வாக்குறுதியாக இடம் பெற்றது அரசு கலை அறிவியல் கல்லூரி தான். கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் போது அரசு கலைக் கல்லூரி அமைக்க கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. ஆனால் அரசு கல்லூரி கோரிக்கை கடைசிவரை நிறைவேறவில்லை. இந்நிலையில் இந்த முறை தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் நிச்சயம் கலை அறிவியல் கல்லூரி மணப்பாறையில் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் கடந்த ஏப்ரலில் நடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின்போது தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மணப்பாறையில் புதிதாக ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் மணப்பாறை பகுதி மக்களன் நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசால் நிறைவேறியது. மணப்பாறை பகுதி மாணவர்கள் மேல்நிலை கல்வியை முடித்தவுடன் உயர்கல்வி பயில திருச்சி அல்லது திண்டுக்கல்லுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. உயர்கல்விக்காக வெளியூர் செல்ல முடியாமல் மாணவர்கள் பலரும் பள்ளிக் கல்வியோடு படிப்பை நிறுத்தி வந்த நிலையில் மணப்பாறையில் அரசு கல்லூரி என்ற தமிழக அரசின் அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டிலேயே கல்லூரியை ஆரம்பிக்க மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. மணப்பாறை அருகே பன்னாங்கொம்பு கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தற்காலிகமாக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு பி.லிட்., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., இயற்பியல், பி.எஸ்.சி., கனிணி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகள் துவங்கப்பட உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை www.tngasa.orgn மற்றும் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பன்னாங்கொம்பில் உள்ள கல்லூரி அலுவலகத்திற்கு வந்த நிலையில் கல்லூரி முதல்வர் அங்கம்மாள் அவர்களிடம் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு தெரிவித்ததுடன் அவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். மேலும் கல்லூரிக்கு தேவையான பென்ச் மற்றும் சேர்களுக்கு வர்ணம் பூசும் பணியும் நடைபெற்று வருகிறது. அரசு கல்லூரி கிராமப்புற மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு மூன்றாவது மாதத்திலேயே கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதற்கு மாணவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்

VIDEOS

RELATED NEWS

Recommended