• முகப்பு
  • கல்வி
  • திருநெல்வேலி பேட்டையில், இல்லம் தேடி மாணவர் சேர்க்கை! நேரடியாக களத்தில் இறங்கிய, மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்!

திருநெல்வேலி பேட்டையில், இல்லம் தேடி மாணவர் சேர்க்கை! நேரடியாக களத்தில் இறங்கிய, மாநகராட்சி பள்ளி தலைமையாசிரியர்!

முத்தையா

UPDATED: May 28, 2023, 8:30:00 PM

திருநெல்வேலியை அடுத்துள்ள, பேட்டை காமராஜர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், நடப்பு 2023-24 கல்வியாண்டில்,6- ஆம் முதல் 12 -ஆம் வகுப்பு வரை, அதிக அளவில் மாணவர்களை சேர்க்கும் வகையில், வீடு- வீடாக சென்று, மாணவர் சேர்க்கையை வலியுறுத்திடும் முனைப்பு இயக்கத்தை, பள்ளித் தலைமையாசிரியர் "முனைவர்" எஸ்.எஸ்.சோம சுந்தரம், இன்று (மே.28) காலையில், நேரடியாக களத்தில் இறங்கி, துவக்கி வைத்தார்.

பழைய மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியின் போது, அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதால், கிடைத்திடும் நன்மைகள் குறித்த துண்டுப்பிரசுரங்கள், வீடு-வீடாக விநியோகிக்கப்பட்டன.

பேட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள ரகுமான் பேட்டை, செக்கடி, ரொட்டி கடை, செந்தமிழ் நகர் உள்ளிட்ட, மாநகரப் பகுதிகளிலும், திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம் போன்ற, புறநகர்ப் பகுதிகளிலும், இவ்வாறு துண்டு பிரசுரங்கள், நேரடியாக முன்னாள் மாணவர்கள் சார்பாக, விநியோகிக்கப்பட்டன.

இந்த நிகழ்வின் போது பள்ளியின் முதுகலை பொருளாதார ஆசிரியர் ஜி.பொன்னு சாமி, முன்னாள் மாணவர் மன்றப் பிரதிநிதிகள் டேனியல் ஆசீர், ஜெயச்சந்திரன், தேவேந்திரன், டேவிட் ஆகியோர், கலந்து கொண்டு சிறப்பித்தனர். "இந்த நடவடிக்கைகள், பள்ளி திறக்கப்படும் நாள் வரை தொடரும்!" என, பள்ளித் தலைமையாசிரியர் சோமசுந்தரம், தெரிவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended