குடியை நிறுத்தனுமா? இது தான் வழி.....

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

குடிப்பழக்கத்தில் இருந்து முழுமையாக வெளிவர வேண்டுமா இதில் ஏதாவது ஒரு வழி பின்பற்றினால் போதும்..! குடியை நிறுத்த வேண்டும் என்றால் குடிப்பவர்கள் தாங்களாகவே சுயகட்டுப்பாட்டுடன் முன்வந்து மனதில் உறுதியான கொள்கை வைத்துக்கொண்டு குடிக்கக்கூடாது என்று நினைத்தால் மட்டுமே முடியும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது குடிகாரர்களே பார்த்து குடியை நிறுத்தாவிட்டால் குடிப்பழக்கத்தில் இருந்து அவர்களை முழுமையாக விடுவிக்க முடியாது இதுதான் உண்மை. இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் குடியை நிறுத்திவிட முடியும் என்று கூறுகிறது இயற்கை மருத்துவம். முதலில் ஏலக்காய் விதை, எலுமிச்சை விதை, இவையிரண்டையும் சம அளவு எடுத்து கொண்டு நன்றாக வெயிலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை நீங்கள் சமைக்கும் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துவிட வேண்டும். குறிப்பாக கறி குழம்பு, மீன் குழம்புகளில் சேர்க்கலாம் குடிப்பவர்களுக்கு தெரியாமல் இதை தொடர்ந்து 30 நாட்களுக்கு கொடுங்கள் விரைவில் நல்ல முன்னேற்றம் தெரியும். குடிக்கும் அந்த ஆல்கஹால் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளாது வாந்தியை ஏற்படுத்தி விடும். இதனால் குடிக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்துவிடுவார்கள். ஒரு டம்ளர் தண்ணீரில் 5 பேரிச்சம் பழங்களை ஊற வைத்து தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் குடிப்பழக்கத்தை கைவிட முடியும். ஆரோக்கியமும் மேம்படும் உடலில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்புச்சத்து, போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும். பாகற்காயை நன்றாக அரைத்து ஒரு கரண்டி சாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள், ஒரு டம்ளர் மோரில் அந்த சாற்றை கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நல்ல பலன் விரைவில் உங்களுக்கு மதுபானம் குடிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றும் போதெல்லாம் கேரட் ஜூஸ் குடிக்கலாம் அல்லது எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம், ஆரஞ்சு பழச்சாறை குடிக்கலாம் இதனைப் பின்பற்றி வந்தால் விரைவில் இந்த குடி பழக்கத்தை கைவிடுவீர்கள். வில்வ இலை சாறு ஜூஸாகவோ கஷாயமாகவோ குடிக்கலாம். மனமது சித்தமானால் மந்திரமது செபிக்க வேண்டாம். மனம் வைத்தால் மார்க்கம் உண்டு. எனவே குடியர் நிறுத்தனும்னு நெனச்சா உடனே நிறுத்தலாம். ஆனால்.... குடியர் நட்பை விலக்குதல் நல்லது. அதாவது குடியை ஞாபகப்படுத்தும் அனைத்தையும் விலக்குதல் நன்மை. *அனுபவஸ்தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended