• முகப்பு
  • district
  • அதே இடத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் சிலை.!!

அதே இடத்தில் மீண்டும் டாக்டர் அம்பேத்கர் சிலை.!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் (கிராம சாவடியில்) அம்பேத்கர் திடலில் 1996ம் ஆண்டு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலை உத்தமபாளையத்தில் நிறுவப்பட்டது. இரண்டு ஆண்டுகள் சென்ற நிலையில் 1997ம் ஆண்டு மனநிலை சரியில்லாத ஒருவரால் சிலை உடைந்த நிலையில் அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பலர் சிறை சென்று வந்த பிறகு பலமுறை சிலையை மீண்டும் மறு சீமைப்புசெய்ய வருவாய் துறை மற்றும் காவல்துறை அனுமதி தராமல் காலதாமதம் செய்து வந்தனர். தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் இப்பிரச்சினை எதிரோலித்தது. உத்தமபாளையம் பேருராட்சிமன்றத் தலைவர் SMS காசிம் அவர்களிடம் அம்பேத்கர் சிலை அமைப்பு குழு மனு கொடுத்துள்ளது. மேலும் தேனியில் நடைபெற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அம்பேத்கர் சிலை உத்தமபாளையத்தில் மீண்டும் மறு சீமைப்புசெய்ய அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்ட நிலையில் , யாரும் அனுமதி தரவில்லை என்ற ஆதங்கம் பொதுமக்கள் இன்று உடைந்த சிலையையே மீண்டும் அவ்விடத்தில் நிறுவினார்கள். தற்போது உத்தமபாளையம் பொதுமக்கள் எங்களுக்கு புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலை இந்த இடத்தில் மீண்டும் மறு சீரமைப்புசெய்து ஆறு அடி முழுத் திருவுருவச் சிலையை தமிழக அரசு நிறுவிக்கொடுக்க வேண்டூம் என ஊர்ப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி செய்தியாளர்: இரா.இராஜா.

VIDEOS

RELATED NEWS

Recommended