• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் சார்பாக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்.

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச் சங்கம் சார்பாக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்.

சுரேஷ் பாபு

UPDATED: May 21, 2023, 1:04:59 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் நகர் பகுதியில் அமைந்துள்ள பழனியப்பா அழகம்மை திருமண மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையம் சங்கம் சார்பாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.மதுரம் தலைமை தாங்கினார் . டாக்டர் கே.கணேசன் அகில இந்திய தலைவர் முன்னிலை வகித்தார். சோ.சங்கர் மாவட்டத் தலைவர் மாநில துணைப் பொதுச் செயலாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.

இந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

பின்பு மாநில சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை மாநில பொருளாளர் பே. முனியப்பன் அவர்கள் வாசித்தார்.

தொடர்ந்து செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டமானது காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது.

மாநில செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பெருந்திரளாய் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended