• முகப்பு
  • sports
  • திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர் அரசு பூங்கா உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 1, 2023, 10:35:06 AM

விழாவானது திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை மதிப்பிற்குரிய எஸ்.ராஜா அண்ணாமலை MSc M.Ed M Phil, அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ் கொடியேற்றி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்கள். பள்ளியின் நான்கு அணிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்கள் மேலும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி மாணவர்களுக்கு நல்ல கல்வியைக் கற்க ஒழுக்கமும் விளையாட்டும் மிக அவசியம் என்று விழா சிறப்புரையில் வலியுறுத்தி பேசினார்கள். திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஆர். ஹேமாவதி ஒலிம்பிக் சுடரை ஏற்றி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் பள்ளியில் கட்டப்பட்ட இரண்டு புதிய அறைகளை பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை து.ஜெயந்தி அவர்கள் திறந்து வைத்தார்கள்... விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.ஷாலினி அவர்கள் முன்னிலை வகித்தார்கள். மேலும் 2003 -2004 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் வருகைத்தந்து விழாவை சிறப்பித்தனர். விளையாட்டு விழாவில் மாணவர்கள் சப் ஜூனியர் , ஜூனியர், சீனியர் என்று மூன்று பிரிவுகளில் தடகளம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், பல போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக விளையாடி பரிசுகளை வென்றனர். இப்பள்ளியில் 980மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். முடிவில் நீல அணி முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்... விழாவிற்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். வரவேற்புரை பள்ளி தலைமை ஆசிரியர் ச.திருமால் வழங்கினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் பட்டதாரி ஆசிரியை .டி. செங்கமலச்செல்வி அவர்களும் உடற்கல்வி ஆசிரியர் டி.தென்னரசு அவர்களும் ஒருங்கிணைத்தனர், ஆர். வெங்கடேசன் பட்டதாரி ஆசிரியர் நன்றியுரை வழங்கினார். திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் கணேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended