• முகப்பு
  • aanmegam
  • நாகை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஶ்ரீ வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை.

நாகை அருகே ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஶ்ரீ வடுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Feb 13, 2023, 6:41:14 PM

நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த பனங்காடி ஊராட்சி வடுவகுடியில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசாலாட்சி அம்பிகா சமேத காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் குழந்தை ரூபமாக காட்சி தரக்கூடிய ஶ்ரீ வடுக பைரவர் தனி சன்னதியில் அமர்ந்து அருள்பாலிப்பது தனி சிறப்பாகும். அதன்படி, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ரூத்ர யாகம் மற்றும் அஷ்டமி மகா யாகம் நடைப்பெற்றது. முன்னதாக பால் பன்னீர் விபூதி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 21 வகையான சமித்து மற்றும் 96 வகையான ஹோம் திரவியங்கள் ,9 வகையான நவ தாணிங்கள், பழவகைகள், பட்டு உள்ளிட்டன கொண்டு மகா யாகமும் தொடர்ந்து சிறப்பு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. மகா தீபாராதனைக்கு பின்னர் கடம் புறப்பாடாகி ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது. பின்னர்‌ கடத்து புனிதநீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகாதீப தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்துகொண்டு மனமுருகி சாமி தரிசனம் செய்தனர். நாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended