• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெண் குழந்தைகள் வயது முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ள  வேண்டுகோள்.

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பெண் குழந்தைகள் வயது முதிர்வு தொகையை பெற்றுக்கொள்ள  வேண்டுகோள்.

மாரிமுத்து

UPDATED: May 9, 2023, 12:43:13 PM

தமிழக சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் துவக்கி வைத்த திட்டத்தின் கீழ் இன்று 50 மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை பெறுவதற்கான அனுமதி இன்று 9.5.2023 வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ளது முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை அதிகமாக வந்து உள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்.

தமிழக முதலமைச்சரும் ஒதுக்கீடு செய்வார் என்று நம்புகிறோம் அப்படி அதிக நிதி வழங்கும் பட்சத்தில் எல்லா மக்களுக்கும்  உதவி தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகளை பெற்றிருந்தவர்கள் குழந்தைகளின் வயது முதிர்வு தொகையை 18 வயது முடிந்தவர்கள் முடிவு தொகையை அந்தந்த சமூக நலத்துறை அலுவலகத்தில் பாண்டு பத்திரத்தை ஜெராக்ஸ் காண்பித்து உரிய தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதிக அளவில் முகவரி மாற்றம் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலாகி சென்றது மாநிலம் இட்டு மாநிலம் சென்றது இதுபோல மாற்றங்கள்  அதிக அளவில் உள்ளது, அதனை கண்டுபிடிக்க முடியவில்லை தமிழகத்தில் சுமார் 20000 வயது முதிர்வு தொகை முடிந்து பணம் பெறாதவர்கள் உள்ளது.

இதுவரை தமிழகத்தில் திமுக ஆட்சி பதவியேற்று இரண்டு ஆண்டுகளில் வயது முதிர்வு தொகை 231 கோடி ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

சின்ன சின்ன பிரச்சனைகள் உள்ளது அதனை அந்தந்த வயது முதிர்வு தொகை பெறக்கூடிய விண்ணப்பதாரர்கள் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்தால் அதனை சரி செய்யப்படும்.

அது போல சிறு வயதில் பாண்டு பத்திரம் பெறப்படுகிறது 18 வயது வரை இருப்பதால் முகவரி மாற்றங்கள் இந்த மாதிரி சின்ன சின்ன பிரச்சனை வருவதால் இடையில் பத்திரத்தை ரினில் செய்வதற்கான சீரமைக்கும் திட்டம் ஒன்று அரசிடம் உள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறினார்.

  • 1

VIDEOS

RELATED NEWS

Recommended