புகை நமக்கு பகை. அதை மறக்கனுமா.......,?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புகை பிடிக்கும் மாயவலையில் இருந்து விடுபட பல முயற்சிகளை எடுத்துக்கொண்டாலும் அதுபெரும்பாலும் பலன் அளிப்பதில்லை. உடலில் இருந்து நிக்கோட்டின் உள்ளிட்டநச்சுக்களை வெளி ஏற்றுவதற்கு உதவும் புகைப் பழக்கத்தை கைவிட முயற்சிக்கும் போது உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்க வேண்டியது மிக அவசியம் அது ஒட்டு மொத்த உடல் நலத்திற்கு நன்மையை சேர்க்கும். தினமும் குறைந்தது ஏழு முதல் எட்டு டம்ளர் நீர் எடுத்துக் கொள்ளலாம். அது மட்டுமின்றி சர்க்கரை சேர்க்காமல், பழச்சாறு, காய்கறி, ஜூஸ், இளநீர், போன்றவற்றையும் எடுக்கலாம். புகை பிடிப்பதற்கும் உடல்எடை அதிகரிப்பதற்கும் நிச்சயம்தொடர்பு இருக்கிறது, அதனால் கலோரிகள் அதிகம்கொண்ட உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவேண்டும். புகைப் பிடிப்பதை விட்டுவிட முயற்சிக்கும்போது சிற்றுண்டிகள் மீது ஆர்வம்ஏற்படும் குறிப்பாக அதிககார்போஹைட்ரேட் நிறைந்தஉணவுகள் மீது நாட்டம்செல்லும். அதே சமயம் சர்க்கரைகலந்த சிற்றுண்டிகளை தவிர்க்கவேண்டும் அதற்குபதிலாக இயற்கையில் கிடைக்கும். நட்ஸ் வகைகள், பீன்ஸ், வேர்க் கடலை, பழங்கள், வேக வைத்த கொண்டைக் கடலை, மக்காச் சோளம், போன்றவற்றை தேர்ந்து எடுக்கலாம். புகைப் பிடிப்பவர்கள் அதிக அளவில் மனஅழுத்தத்தை தவிர்ப்பதற்காகவே புகைப் பிடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் இதனைத்தவிர்க்க நீங்கள் புகைப் பிடிக்க தோன்றும் போதெல்லாம் இசைகேட்கலாம் அல்லது சாக்லெட்சாப்பிடலாம் அல்லது நடை பயிற்சி மேற்கொள்ளலாம். அல்லது பழச்சாறு எடுத்துக்கொள்ளலாம் அல்லது உங்களுக்கு பிடித்த பொழுது போக்கான ஒரு செயலை செய்யலாம். மருந்து கடைகளில் தற்போது புகை பழக்கத்தை கைவிட பிரத்யேக சூயிங்கம்கள் வந்துள்ளன. அவை ஓரளவு கை கொடுக்கலாம். புகை பிடிக்க நினைக்கும் போதெல்லாம் ஏலக்காயை வாயில் வைத்து மெல்லலாம். சில்வர் நைட்ரேட்டை நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் புகை பிடித்தால் வாய் அகட்டுமென சொல்கிறார்கள். மருத்துவர் ஆலோசனை நல்லது. புகை பிடிக்க நினைவு வரும் போதெல்லாம் ஏதேனும் சிற்றுண்டியால் வாயிக்கு வேலைக்கொடுங்கள். இது போல சில தினங்கள் பழகினால் புகை பழக்கம் மறந்து போகும். குழந்தைக்கு பால் எப்படி மறக்க வைப்பார்கள் அது போல புகை பழக்கத்தை மறக்க வைக்க முடியும். மனது வைத்தால் மார்க்கம் உண்டு. நம்மால் முடியாதது யாராலும் முடியாது. யாராலும் முடியாதது நம்மால் முடியும் என்ற உத்வேகம் கொண்டு இதை படிக்கும் நேரம் முதல் இனி புகை பிடிக்கமாட்டேன் என உறுதி மொழி எடுங்கள். சிகரட் பக்கமோ சிகரட் கடை பக்கமோ சிகரட் பிடிப்போர் பக்கமோ இனி செல்லவே மாட்டேன் என சிகரட் மீது சத்தியம் செய்து அதன் படி நடக்கவும். வாழ்க நலமுடன் *அனுபவ தன்*

VIDEOS

RELATED NEWS

Recommended