• முகப்பு
  • குற்றம்
  • பேரணாம்பட்டில் உரிமம் பெறாமலும் பெயர் பலகை இல்லாமலும் செயல்படும் தோல் கம்பெனிகள்.

பேரணாம்பட்டில் உரிமம் பெறாமலும் பெயர் பலகை இல்லாமலும் செயல்படும் தோல் கம்பெனிகள்.

வாசுதேவன்

UPDATED: May 12, 2023, 1:54:33 PM

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் பெரும்பாலான தோல் கம்பெனிகள் உரிமம் பெறாமல் இயங்கி வருகின்றன. உரிமம் பெற்ற ஒரு சில தோழர் கம்பெனிகள் பெயர் பலகையை வைக்காமலும்  இயங்கி வருகின்றன.

குறிப்பாக பேரணாம்பட்டு வி. கோட்டா ரோடு, பகுதியில் பாட்டை சாரதி அம்மன் கோயில் அருகில் உள்ள  கம்பெனியில் விறகுக்கு பதிலாக மாட்டுக் கழிவான ஜவ்வுகளையும், சூராக்களையும் எரிய விடுகின்றனர் எனவும்,

இதனால் இந்த கம்பெனியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் ,மாசு கலந்த புகை வெளிவருவதால் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறலும், இருமலும், குமட்டலும், வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும் கதை கதையாக கூறப்படுகிறது.

மேலும் மத்தூர் பகுதியில் இயங்கி வரும் கம்பெனியில் அரசு அலுவலர்களுக்கு தெரியாமல் மறைமுகமாக கொழுப்பு கம்பெனி ஒன்றையும் நடத்தி வருவதாகவும் இப்பகுதி மக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. 

மேலும் பேரணாம்பட்டு அண்ணா நகர் அருகில் கடந்த பல வருடங்களாக கொழுப்பு எனப்படும் மாட்டுக் கழிவின் ஜவ்வுகளையும், கொழுப்புகளையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு கம்பெனி ஒன்று மறைமுகமாக இயங்கி வருகிறது.

எப்பொழுதுமே கம்பெனியின் கதவுகள் பூட்டிய நிலையிலேயே இந்த கம்பெனி இயங்கி வருவதாக இப்பகுதி மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் பேரணாம்பட்டு நகரத்தில் வேட்புலு என்று சொல்லப்படும் பெரும்பாலான தோல் கம்பெனிகள் உரிமம் பெறாமல் செயல்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது போன்ற ஒரு சில கம்பெனிகளில் ஏழைகளின் பலஹீனத்தை பயன்படுத்திக் கொண்டு பள்ளிக்குச் செல்லக்கூடிய சிறுவர்களை மறைமுகமாக வேலை வாங்குவதாகவும் பேரணாம்பட்டு பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் சாலப்பேட்டை பகுதியில் இயங்கி வரும்  தொழிற்சாலையில் சுத்திகரிக்கப்படாத தோல் கழிவு நீரை இரவு நேரத்தில் இந்த கம்பெனியின் வழியாக செல்லும் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாயில் சத்தமின்றி திறந்து விட்டு விடுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

எனவே இது குறித்து வேலூர் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அரசு அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் வந்து கள ஆய்வு செய்ய வேண்டும்.

அப்போது மேற்கண்ட கம்பெனி களில் நடந்து வரும் தில்லாலங்கடி வேலைகள் உண்மை என தெரியவரும் பட்சத்தில் மேற்கண்ட கம்பெனிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுகட்டுப்பாட்டு அலுவலர் ரவிச்சந்திரனுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பேரணாம்பட்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த கம்பெனிகள் மீது மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்குமா ? அல்லது கண்டும், காணாமல் விட்டுவிடுவார்களா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

VIDEOS

RELATED NEWS

Recommended