சிங்கவரம் ரங்கநாத பெருமாள் கோவில் பிரமோற்சவ திருவிழா.

மேஷாக்

UPDATED: May 22, 2023, 12:07:16 PM

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ளது ரங்கநாத பெருமாள் கோவில்.

இக்கோவில் பல்லவர் கால குடவரை கோவிலாகும், செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்கு வணங்கிய தெய்வம்.

இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தினமும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. காலை, இரவு சாமி ஊர்வலம் ஆகியவை நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று 22.5.2023 தேர்த்திருவிழா நடைபெற்றது. அதனை முன்னிட்டு காலையில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆரா தனைகள் நடத்தப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவி பூதேவி சமேதரங்கநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேரில் ஏற்றப்பட்டு தேர் திருவிழா நடைபெற்றது.

இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேர் மாட வீதி வழியாக சென்று மீண்டும் தேர் நிலையை அடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மேற்பார்வையில் உபயதாரர்கள் மற்றும் கிராம பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தர்களுக்கு நீர் மோர், அன்னதானம் வழங்கப்பட்டது.

VIDEOS

RELATED NEWS

Recommended