வெள்ளி விழா நாயகன் மைக் மோகன்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மோகன் (இயற்பெயர்: மோகன் ராவ்) 23 ஆகஸ்ட் 1956 கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் சேர்ந்தவர். இவர் கன்னட, மலையாளம், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் திரைப்படங்களினால் மிகவும் புகழ் பெற்றவர். மோகன் உணவகம் ஒன்றில் சந்தித்த பி. வி. கராந்த் என்பவர் நாடக உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இவரின் முதல் நாடகத்தை தில்லியிலிருந்தும் விமர்சகர்கள் பாராட்டினர். இவர் கன்னடத் திரையுலகிற்கு பாலு மகேந்திராவின் கோகிலா திரைப்படத்தில் (1977) தமிழ் நடிகர் கமல்ஹாசனுடன் அறிமுகமானார் . 1980 இல் மூடுபனி வெளியானதிலிருந்து இவர் தமிழ்த் திரையுலகில் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவரானார். 1980 களில் மோகன் 'வெள்ளி விழா நாயகன்' என்று அழைக்கப்பட்டார். இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்களில் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவில் இருக்கும் 80 களின் பாடல்கள். இவரை செல்லமாக "வெள்ளி விழா நாயகன்" என்றும் "மைக் மோகன்" என்றும் மக்கள் அழைத்தனர். செய்தியாளர் பாஸ்கர்.

VIDEOS

RELATED NEWS

Recommended